சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினமும் ஆயிரம் லிட்டர் தண்ணீரை அசால்டாக காலி செய்து வந்த சென்னை மக்களுக்கு நேர்ந்த சோகம்

Google Oneindia Tamil News

சென்னை: மூன்று நாளைக்கு ஒரு முறை மட்டும் சென்னையில் தண்ணீர் வருகிறது. அதுவும் 30 நிமிடத்தில் தண்ணீர் நின்றுவிடுவதால் சென்னை மக்கள் தண்ணீருக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்கள்.

சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரிந்து ஆடுகிறது. மக்கள் வாட்டர் கேன்களை வாங்கி குடிக்க பயன்படுத்தி கொள்கிறார்கள்.

ஆனால் குளிக்க, பாத்ரூம் போக, துவைக்க என அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் கடும் அவஸ்தையில் உள்ளார்கள்.

வேதனையில் மக்கள்

வேதனையில் மக்கள்

தண்ணீர் லாரிகள் எந்த நேரமும் ஊருக்குள் வரலாம் என உத்தரவு போட்டாலும், ஆனால் அவை எந்த தெரு பக்கமும் எட்டி பார்க்காமல் இருப்பதாகவே சென்னை வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது ஒன்னு போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல.. வைரலாகும் வீடியோ!இது ஒன்னு போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல.. வைரலாகும் வீடியோ!

சரிந்த நிலத்தடி நீர்

சரிந்த நிலத்தடி நீர்

பல அடுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டியவர்கள், நிலத்துக்கு அடியில் நீரை ஊறிஞ்ச போர் போட்டர்கள். இப்போது மொத்தமாக உறிஞ்சிவிட்டதால் தண்ணீருக்காக அப்பார்ட்மெண்டுகள் மெட்ரோ லாரிகளை எதிர்நோக்கி உள்ளன. தரமணி பகுதிகளில் பல இடங்களில் நிலத்தடி நீர் 250 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

30 நிமிடம் தண்ணீர்

30 நிமிடம் தண்ணீர்

சென்னையில் தற்போது 3 நாளைக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது.அதுவும் 30 நிமிடத்தில் நின்றுவிடுவதால் மக்கள் எப்போது தண்ணீர் வந்தது. எப்போது நின்றது என்பது தெரியாமல் மீளா துயரத்தில் தவிக்கிறார்கள்.

2 குடம். 3குடம்

2 குடம். 3குடம்

தினசரி 1000 லிட்டர் நீரை அசாலட்டாக பயன்படுத்தி வந்த சென்னை மக்களுக்கு இப்போது 2 குடம், 3 குடம் தண்ணீர் தான் இப்போது கிடைக்கிறது, அதுவும் சமையலுக்கு வேண்டும் என்கிற நிலையில் குளிப்பதற்கும், மற்ற இதர தேவைகளுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

பழைய பைப்புகள்

பழைய பைப்புகள்

முன்பு தினசரி 2000 முறை தண்ணீர் லாரிகள் வரும். இப்போது நாள்தோறும் 8400 முறை லாரிகள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. திருவெற்றியூர், எண்ணூர் பகுதியில் மோசமான திட்டமிடலுடன் பதிக்கப்பட்ட பழைய பைப்புகள் காரணமாகவும் தண்ணீர் வருவதில்லை. அவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
chennai city faced worse situations for water, Water Supply only once in 3 days in chennai, at times for 30 minutes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X