ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்கியாச்சு.. அவர் புதிதாக கட்சி தொடங்கியிருக்கிறார்.. தளவாய் சுந்தரம்
சென்னை: ஓ பன்னீர் செல்வத்தின் செயல்பாடு அதிமுகவில் எப்படி இருந்தது என்பது நாடே அறிந்த உண்மை. இதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நாங்கள் ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் என்று தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
அதிமுகவில் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக பொதுக்குழுவை கூட்டியது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் வழக்கு
ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஓபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பை அளித்தார். பின்னர் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை டிவிஷன் பெஞ்ச் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல் முறையீடு செய்தார்.

கட்சியின் சின்னம் முடக்கப்படுமா?
இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. இதற்கு மத்தியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அதிமுகவின் இரு அணிகளும் அறிவித்துள்ளன. இரட்டை இலை சின்னத்தை பெற இரு தரப்பும் முனைப்பு காட்டும் எனத்தெரிகிறது. இதனால், கட்சியின் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்கள் செல்லும் என கூறப்படுகிறது.

தேர்தல் பணிகள்
இத்தகைய பரபரப்பு மிக்க சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் தேர்தல் பணிக்குழுவை அறிவித்து தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. பாஜக போட்டியிட்டால் தங்கள் தரப்பு போட்டியிடாது என்று ஓ பன்னீர் செல்வம் கூறி வருகிறார். ஆனால் போட்டியிடுவதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.

கட்சியை விட்டு நீக்கிவிட்டோம்
இதனிடையே இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். அதிமுகவின் இரு அணிகளுமே இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறி வருகின்றன. இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டு இருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் கூறியுள்ளார். இது தொடர்பாக தளவாய் சுந்தரம் கூறுகையில், "ஓ பன்னீர் செல்வத்தின் செயல்பாடு அதிமுகவில் எப்படி இருந்தது என்பது நாடே அறிந்த உண்மை. இதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நாங்கள் ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவர் கட்சியை தொடங்குவதாக கூறியிருக்கிறார். குழுவை போடுகிறார். தேர்தலில் சந்திப்போம்" என்று கூறினர்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications