சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரசாந்த் பூஷனுக்கு துணை நிற்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரின் கடமை: சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் துணை நிற்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரின் கடமை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் படத்தின் மீது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

We Should Support to Senior advocate Prashant bhushan, says Seeman

இதனடிப்படையில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக மத்திய பிரதேச வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் பிரஷாந்த் பூஷனை குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

We Should Support to Senior advocate Prashant bhushan, says Seeman
We Should Support to Senior advocate Prashant bhushan, says Seeman

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்ட கருத்துரிமை, 1947க்கு பிறகான சுதந்திர இந்திய ஒன்றியத்தில் பெயரளவிலேனும் நிலைநாட்டப்பட்டதாக நம்பிக்கொண்டருந்த வேளையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு தண்டனை விரும்பத்தகாத ஒன்று.

நீதித்துறை மீதான எண்ணற்ற இளையோர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பிரசாந்த் பூஷன் அவர்களோடு துணை நிற்பது சனநாயகத்தின் மீதும், அதனை அங்கீகரிக்கும் அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை.

பிரதமர் மோடிஜி! இந்திய ராணுவத்திற்கு வீரம், திறமை உண்டு.. அனைவருக்கும் தெரியும்.. ராகுல்காந்திபிரதமர் மோடிஜி! இந்திய ராணுவத்திற்கு வீரம், திறமை உண்டு.. அனைவருக்கும் தெரியும்.. ராகுல்காந்தி

இதுவரை ஏழைகளின் குரலாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாகவும் வலம் வந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் மேலும் உறுதியோடு இயங்க, நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே இன்றைய தேவை.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar Chief Co-ordinator Seeman has urged that We Should Support to Senior advocate Prashant Bbhushan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X