சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனிதநேயம் செத்து போச்சுங்க..ஹவுஸ்ஓனர் காலி பண்ண சொல்றார்..சிறுவன் அப்துல் தேச விரோதியா.. கதறும் தாய்

சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு நெருக்கடி தரப்படுகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: சிறுவன் அப்துல் கலாம் பேசிய பேச்சு வைரலானதையடுத்து, அவர்களின் வீட்டை காலி செய்ய சொல்லி நிர்ப்பந்தம் தரப்படுவதாக சிறுவனின் தாயார் கண்ணீர் பேட்டி தந்துள்ளார். இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது..

"என்ன எல்லாரும் பல்லன்னு தான் கூப்டுவாங்க.. ஆனா எனக்கு எல்லாரையுமே புடிக்கும், எல்லாரும் நண்பர்கள் மாறி தான் என்று சிறுவன் அப்துல் கலாம் பேசிய பேச்சு தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது..

சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் தான் அப்துல் கலாம். 7-ம் வகுப்பு படிக்கிறான்.. ஒரு சேனலுக்கு அளித்த ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டான்...

"யாரையும் வெறுக்கக் கூடாது.." மனிதநேயம் பற்றி பாடமெடுத்த குட்டி பையன்! வாரி அணைக்கும் தமிழ் சமூகம்

ஒற்றுமை

ஒற்றுமை

"வாழ்வில் உங்களுக்கு பிடிக்காத நபர் என்றால் அது யார்" என்ற பொதுப்படையாக கேட்கப்பட, எல்லாரும் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி கொண்டே வந்தனர்.. ஆனால் சிறுவன் அப்துல், யாரையும் புடிக்காதுன்னு முதல்ல சொல்லாதிங்க, என்னையும் எல்லாரும் பல்லன்னு தான் கூப்டுவாங்க... நான் ஏன் எல்லாரையும் புடிக்காதுன்னு சொல்லனும்?.. எல்லாரும் நண்பர்கள் மாறி தான். ஒற்றுமை இல்லாத நாடு எதுக்கு இருக்கனும்.. நம்ம நாடு ஒற்றுமையான நாடுனு சொல்றோம், ஒற்றுமை இல்லாம இருந்தா எப்படி? என்று கேட்டு திணறடித்து விட்டான்.

 ஜாதி கலவரம்

ஜாதி கலவரம்

இதற்கு பிறகு வேறு ஒரு பேட்டியில், ஹிஜாப் பிரச்சினையை குறித்து அப்துல்லிடம் கேட்டனர்.. அதற்கு அவன், சாதி மத கலவரம் நமக்கு எதுக்கு.. அதெல்லாம் இங்கே தேவையில்லை.. எல்லாருமே இந்தியர்கள்.. எல்லாரும் ஒரே மாதிரிதான்.. எல்லாருக்கும் ரத்தம் கலரு ஒன்னுதான்.. நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் சாதி மதம்ன்னு சொல்லி தந்துட்டாங்க.. அதனாலதான் சாதி பத்தி இப்போ வரைக்கும் பேசிட்டு இருக்கோம் " என்று திக்குமுக்காடி போகும் அளவுக்கு பதில் தந்தான்.

 ஹவுஸ் ஓனர்

ஹவுஸ் ஓனர்

சிறுவனின் வீடியோவும், அந்த பேச்சும் சோஷியல் மீடியாவில் வைரலானது.. பொதுமக்களோ, இதை கேட்டும் பார்த்தும் வாயடைத்து போனார்கள்.. மனம் திறந்து அப்துல்லை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் திடீரென ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.. அப்துல் பேசிய பேச்சு வைரலானதால், இவர்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்கிறார்களாம்.. இதுகுறித்து அப்துல்லின் அம்மா கண்ணீர் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், அவர் சொன்னதாவது:

 கண்ணீர் பேட்டி

கண்ணீர் பேட்டி

"இந்த பையன் பேட்டி தந்து 2 நாள்தான் ஆகுது.. அவனா மனசில பட்டதை பேசினான்.. வேணும்னே பேசல.. அதுக்கே இவ்வளவு அழுத்தம் தர்றாங்க.. நாங்க வீடு இல்லாமல் இங்கே வந்திருக்கோம்.. யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல.. எங்களை வீடு காலி பண்ண சொல்றாங்க ஹவுஸ் ஓனர்.. நாங்கள் எப்படி வெளியே போனோம்.. வேணாங்க நீங்க உடனே காலி பண்ணுங்க ன்னு சொல்றாங்க.. மனித நேயம் என்பது இங்கேயே செத்து போச்சு.. என் பையனுக்கு எதுவுமே நாங்க சொல்லி தந்தது இல்லை..

 இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. ஆனால், இந்தியா பாகிஸ்தான் போல எங்களை நடத்துகிறார்கள்.10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்திருக்கோம் இந்த வீட்டுக்கு.. 2 ஆயிரம் ரூபாய் வாடகை.. என் 4 குழந்தைகளை கூட்டிட்டு எங்கே போவேன்.. அந்த குழந்தை தந்த பேட்டி தவறா? அவனை இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.. எப்படி எங்களுக்கு மத்தவங்க மட்டும் வீடு தருவாங்க?" என்று கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார். இந்த வீடியோவும் தற்போது மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

English summary
What an intelligent boy: student abdul kalam family is in crisis and what happened actually
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X