4 சிக்கல்கள்.. அந்த 2 வீரர்கள்.. இந்திய அணியை சூழ்ந்து நிற்கும் "புதை மணல்".. இன்று என்ன நடக்கும்?
சென்னை: முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி இன்று நடக்க உள்ள போட்டியில் முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில் தற்போது இரண்டு அணிகளும் ஒருநாள் தொடரில் மோதிக்கொண்டு இருக்கின்றன.
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்து உள்ளது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 306 ரன்களை அடித்தது. இந்திய அணியில் ஓப்பனிங் இறங்கிய தவான் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சுப்மான் கில் 65 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் தொடக்கத்தில் நிதானமாக ஆடினார். 76 பந்துகள் பிடித்த அவர் 80 ரன்கள் எடுத்தார்.
அடடே! பிரிட்டன் பிரதமரானாலும் இந்திய கலாச்சாரம் மறக்காத ரிஷி சுனக்! மகள் குச்சிப்புடி ஆடி அசத்தல்

தோல்வி
இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தும் மோசமான பவுலிங் காரணமாக கடைசி கட்டத்தில் தோல்வி அடைந்தது. இரண்டாவது இந்திய அணியில் உம்ரான் மாலிக் மட்டுமே இன்று நன்றாக பவுலிங் செய்தார். அவர் மட்டும் தனது பவுலிங்கில் நிறைய வெரைட்டிகளை காட்டினார். 15.1 ஓவரில் டெவன் கான்வாய் 24 ரன்கள் இருந்த போது அவரின் விக்கெட்டை எடுத்தார். அதேபோல் 19.5 ஓவரில் டெரி மிட்சல் 11 ரன்கள் இருந்த போது அவரின் விக்கெட்டை எடுத்தார். மற்ற பவுலர்கள் இவருக்கு பெரிதாக சப்போர்ட் கொடுக்கவே இல்லை. இதனால் வெறும் 47.1 ஓவரில் நியூசிலாந்து அணி 309/3 ரன்கள் எடுத்து வென்றது. டாம் லாதம் மட்டும் 145 ரன்கள் எடுத்து வென்றார்.

இரண்டாவது போட்டி
இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மேட்ச் இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. செட்டன் பார்க் மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. இந்த அணிக்கு இந்த போட்டியில் 4 சிக்கல்கள் உள்ளன. முதல் சிக்கல் ஸ்பின் பவுலிங். அணியில் இருக்கும் லெக் ஸ்பின் பவுலிங் இந்திய அணியில் மிகவும் மோசமாக உள்ளது. இந்த போட்டி நடக்கும் செட்டன் பார்க் மைதானத்தில் லெக் ஸ்பின் சிறப்பாக உதவும். அதேபோல் பிட்சும் ஈடன் பார்க் மைதானத்தை விட பெரிய பிட்ச் ஆகும். இதனால் இந்திய அணி ஸ்பின் பவுலிங்கில் மாற்றத்தை செய்ய வேண்டும்.

இரண்டாவது சிக்கல்
இந்திய அணிக்கு இருக்கும் இரண்டாவது சிக்கல் பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர். தற்போது ஷரத்துல் தாக்கூர் இந்த இடத்தில களமிறக்கப்பட் டுஉள்ளார். ஆனால் கடந்த போட்டியில் அவர் மோசமாக பவுலிங் செய்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸ் கொடுத்தார். இந்த ஓவரில்தான் ஆட்டமே மாறியது. இதனால் அடுத்த போட்டியில் இவர் இருப்பாரா என்பது சந்தேகம்தான். சாகர் இவரை விட நன்றாக பேட்டிங் செய்வார். அதேபோல் சாகரின் பவுலிங்கும் நன்றாக இருக்கும். இந்திய அணிக்கு இருக்கும் மூன்றாவது சிக்கல் என்றால் அது பேட்டிங் ஸ்டிரைட் ரேட். இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடினாலும், மிக மோசமான ஸ்டிரைக் ரேட் வைத்து உள்ளனர். அதிலும் சில வீரர்கள் டெஸ்ட் இன்னிங்ஸ் போல ஆடுகிறார்கள்.

பவுலிங்
இந்திய அணிக்கு இருக்கும் அடுத்த சிக்கல் பவுலிங். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிக மோசமாக உள்ளது. கடந்த போட்டியில் உம்ரான் மாலிக் மட்டுமே சரியாக பவுலிங் செய்தார். மற்ற வீரர்கள் யாரும் சரியாக பவுலிங் செய்யவில்லை. இதுவும் இந்திய அணிக்கு பெரிய சவாலாக மாறி உள்ளது. இந்திய அணியின் பவுலிங் என்பது புதை மணல் போல கடந்த இரு வருடமும் இந்திய அணியை பாதாளத்தை நோக்கி இழுத்து சென்று கொண்டு இருக்கிறது. கடந்த போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக திரும்பியது இந்த மோசமான பவுலிங்தான். இந்த 3 சிக்கல்களை சரி செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.

மாற்றம்
இந்திய அணியின் 4வது சிக்கல் கேப்டன்சி. கடந்த போட்டியில் இந்திய அணியில் தவானின் கேப்டன்சி மிக மோசமாக இருந்தது. பவுலிங் ரொட்டேஷன் சரியாக இல்லை. பீல்டிங் செட்டப்பும் மிக மோசமாக இருந்தது. . இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றதும் சரியாக பவுலர்களை ரொட்டேட் செய்து இருக்க வேண்டும். அதேபோல் அவரின் பீல்டிங் நிற்க வைத்த முறையும் மோசமாக இருந்தது. இதை மாற்ற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. தவான் இன்னும் ஆக்டிவாக இருக்க வேண்டும். இதனால் இந்திய அணி பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று ஆடும் அணியில் சஹால், ஷரத்துல் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. சாகர், குல்தீப் ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இன்று ஆடும் இந்திய அணியில் ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ரிஷப் பந்த் (வி.கே), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், சாகர், குல்தீப் ஆகியோர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.