நயன்தாரா- விக்னேஷ் சிவன் சர்ச்சை.. வாடகைத் தாய் சட்டம் சொல்லும் முக்கிய ரூல் என்ன?
சென்னை: வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள என்னென்ன விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை பார்ப்போம்.
திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். கணவருக்கோ மனைவிக்கோ இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என்று மருத்துவர் சான்றளிக்க வேண்டும்.
வாடகைத் தாயாக வருபவர் வணிக ரீதியில் இருக்கக் கூடாது. வாடகைத்தாய்க்கு 16 மாதங்களுக்கு காப்பீடும் ,மருத்துவ செலவுகளை மட்டுமே செய்ய வேண்டும். இதை தாண்டி ஒரு ரூபாய் கூட அந்த வாடகைத்தாய்க்கு இந்த தம்பதி கொடுக்கக் கூடாது.

வாடகைத் தாய்
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேறு என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன என்பதை பார்ப்போம். இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சைக்கான மருத்துவமனையின் மருத்துவர் ஜெயராணி காமராஜ் விளக்கியுள்ளார்.

குழந்தை பெற்று கொடுக்கும் பெண்
அவர் கூறுகையில் வாடகைத் தாயாக வந்து குழந்தை பெற்று கொடுக்கும் பெண், குழந்தை இல்லாத தம்பதிக்கு உறவுக்கார பெண்ணாக இருத்தல் வேண்டும். அந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தையாவது இருத்தல் வேண்டும். திருமணமாகாத பெண்கள் வாடகைத்தாயாக இருத்தல் கூடாது.

யாருக்கு அனுமதி இல்லை
அது போல் வாடகைத் தாய் முறை மூலம் அணுகும் தம்பதிக்கும் திருமணமாகியிருக்க வேண்டும். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்போர் நிச்சயம் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி இல்லை. அது போல் LGBTQ பிரிவினரும், ஓரின சேர்க்கையாளர்கள் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த முக்கிய விதியைத்தான் இந்த பிரிவினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

வாடகைத்தாய் முறை
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொடுக்கும் பெண் தனது கர்ப்பப்பையை மட்டுமே கொடுக்கிறார். அதில் தம்பதியின் கருமுட்டையும் விந்தணுவும் செலுத்தப்பட்டு கருவாகிறது. ஒரு வேளை பெண்ணுக்கு கருமுட்டையே இல்லாத நிலையில் கருமுட்டையை தானம் பெற்று அதை கணவரின் விந்தணுவுடன் சேர்த்து வாடகைத்தாயின் உடலில் செலுத்தப்படும். மற்றபடி எந்த இடத்திலும் வாடகைத்தாயின் கரு முட்டை பயன்படுத்தப்படுவதில்லை என ஜெயராணி தெரிவித்துள்ளார்.

விதிமீறலா?
இந்த மருத்துவர் சொல்வதை பார்த்தால் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜனவரி 2022 ஆம் ஆண்டு வாடகைத்தாய் முறைக்கு அணுகியிருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு திருமணமானதோ ஜூன் 9ஆம் தேதிதான். எனவே இது விதிமீறலா, யார் மீது நடவடிக்கை பாயும், மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை என்றால், தம்பதிக்கு என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்பதெல்லாம் நயன்தாரா- விக்னேஷ் தரப்பிடம் விசாரணை நடத்தப்பட்டு பிறகே தெரியவரும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications