ஒரே நாளில் தலைகீழான சைதாப்பேட்டை ஏட்டு கமலக்கண்ணனின் வாழ்க்கை .. ஒரு தவறால் மொத்தமாக வந்த சிக்கல்
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் குடிபோதையில் வந்த குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன் என்பவர் பெண் என்ஜினியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஒருபுறம் எனில் இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. என்ன நடந்து என்பதை பார்ப்போம்.
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான மின்சார ரயில் நிலையங்களில் ஒன்று. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், தினமும் அலுவலகத்திற்கும், வேலை நிமிர்த்தமாகவும் பயணிப்பார்கள். எப்போதுமே இந்த ரயில் நிலையம், மிகவும் பரபரப்பாகவே காணப்படும், அண்ணாசாலையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள இந்த ரயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் பயணிகள் எளிதாக பயணிக்க முடியும்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி இரவு பெண் என்ஜினீயர் ஒருவர், தனது சகோதரருடன் நடைமேடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது போதையில் அங்கு வந்த சைதாப்பேட்டை குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன், பெண் என்ஜினியரிடம் ஆபாசமாக பேசினாராம்.
பின்னர், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மற்றும் அவரது சகோதரர் இருவரும் போலீஸ் ஏட்டு கமலக்கண்ணனை எதிர்த்து சரமாரியாக கேள்விகளை கேட்டார்களாம். ஆனால், ஏட்டு கமலக்கண்ணன் மதுபோதையில் தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்தாராம்.
இதையடுத்து பெண் என்ஜினியரும், அவரது சகோதரரும் இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மாம்பலம் ரயில்வே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் கமலக்கண்ணன், குடிபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சைதாப்பேட்டை குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் அருண் நேற்று உத்தரவிட்டார். மேலும், தலைமறைவாக உள்ள கமலக்கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில்போலீஸ்காரர் ஒருவரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கிளாம்பாக்கத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications