பெரிய ட்விஸ்ட்.. ஓபிஎஸ்ஸுக்கு உதவிய 7 "பாயிண்ட்ஸ்".. தீர்ப்பையே புரட்டி போட்ட வாதம்! வென்றது எப்படி?
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பை மீறி கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.
அதேபோல் அந்த பொறுப்பில் இருக்கும் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி ஆகியோரும் நீக்கப்பட்டனர். இது போக அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.
இந்த பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டார். அதோடு நிரந்தர பொதுச்செயலாளருக்கான தேர்தலும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

செல்லாது
இந்த நிலையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.. சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்துவிட்டன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். இதில்ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு பேருமே இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வர அவரின் வாதங்கள்தான் முக்கியமான காரணமாக அமைந்தது.

ஓபிஎஸ் வாதங்கள்
இந்த வழக்கில் ஓபிஎஸ் வைத்த வாதங்கள் பின்வருமாறு,
வாதம் 1 - அதிமுக பொதுக்குழுவே சட்டப்படி கூட்டவில்லை.
வாதம் 2 - பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது. அதோடு அவைத் தலைவரை நிரந்தரமாக தேர்வு செய்ததை ஒருங்கிணைப்பாளர் அங்கீகரிக்கவில்லை. அவர் அங்கிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார். அதனால் இவர் பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தது செல்லாது.

என்ன சொன்னார்
வாதம் 3 - ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லாதபட்சத்தில் பொதுக்குழுவை பொதுக்குழுவை தலைமை கழக செயலாளர் மற்றும் பொருளாளர் கூட்ட முடியும். ஆனால் பொதுக்குழுவில் பதவிகள் அங்கீகரிக்கப்படாத காரணத்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகின்றன என்று வாதம் வைக்க முடியாது.
வாதம் 4 - இரண்டு பதவிகளும் காலாவதி ஆனால் பொதுக்குழு உறுப்பினர்களும் பதவிகளும் காலாவதியாகும்.

பின்னணி
வாதம் 5 - 5 ஆண்டுகள் இவர்களுக்கு பதவிக்காலம் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகியவிட்டது என்று 5 ஆண்டுகளுக்கு கூறவே முடியாது.
வாதம் 6- அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது தவறு. ஏனென்றால் அந்த பொதுக்குழுவில் அப்படி ஒரு தீர்மானமே கொண்டு வரப்படவில்லை.
வாதம் 7- அதிமுக பொதுக்குழுவிற்கு டிவியில் அழைப்பு விடுப்பதை கணக்கில் கொள்ள முடியாது. 15 நாட்களுக்கு முன்பாக முறையாக அழைப்பு செல்லவில்லை.
-
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்..நொறுங்கிய அதிமுக! இனி விஜய்க்குதான் நல்ல காலம்! எப்படி தெரியுமா? -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்!












Click it and Unblock the Notifications