குடும்ப மீட்டிங்.. உணர்ச்சிவசப்பட்ட ரஜினி.. உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது எப்போது? என்ன நடந்தது?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் ரத்த குழாய் வால்வுகளில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிகின்றன.
Recommended Video
ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் கிடையாது. நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து இன்று காவிரி மருத்துவமனை அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட உள்ளது. அதுவரை பல்வேறு வதந்திகள், தவறான செய்திகள் இணையத்தில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு என்ன நடந்தது? அவர் எப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்? என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

விருது வாங்கினார்
நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருந்து வாங்குவதற்காக தங்கி இருந்தார். ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, தனுஷ், அவர்களின் குழந்தைகள் என்று மொத்தமாக குடும்பத்தோடு அவர்கள் டெல்லிக்கு சென்று இருந்தனர். தனுஷும் தேசிய விருது வாங்கியதால் அவர்கள் ஒன்றாக பயணம் மேற்கொண்டு தங்கி இருந்தனர்.

குடியரசுத் தலைவர் பிரதமர் மோடியை சந்தித்தார்
இந்த விருது வழங்கும் விழாவிற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அதன்பின் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கடந்த 4 நாட்களே நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு சந்திப்புகள், உரையாடல்கள் என்று பிஸியாகவே இருந்தார். இந்த டெல்லி சந்திப்பிற்கு பின் ரஜினிகாந்த் நேற்று முதல்நாள் சென்னை திரும்பினார்.

தமிழ்நாடு வந்தார்
சென்னை வந்தவர் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து விருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருவர் உயரிய விருது வாங்கியதை அடுத்து இவர்கள் ஒன்றாக விருந்து சாப்பிட்டு கொண்டாடி இருக்கிறார்கள். இதன்பின் சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஹூட் செயலியை ரஜினிகாந்த் பயன்படுத்தினார். இதில் ஆடியோ வெளியிட்டு அந்த செயலியை பிரபலப்படுத்தினார். இதற்கான சின்ன ட்ரீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹூட் செயலி
இந்த நிகழ்வின் போது ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்களோடு நீண்ட நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக உள்ள அண்ணாத்த படத்தை ரஜினிகாந்த் பார்த்தார். தனது பேரன் அண்ணாத்த படத்தை பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் மூலம் இந்த படத்தை குடும்பத்தோடு சேர்ந்து ரஜினிகாந்த் பார்த்தார்.

அண்ணாத்த படம்
இந்த நிகழ்வின் போதே ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மகளின் புதிய ஆப், இரண்டு விருதுகள், பேரன்களோடு சேர்ந்து சினிமா என்று அடுத்தடுத்த நடந்த மனதிற்கு நெருக்கமான விஷயங்கள் காரணமாக ரஜினிகாந்த சந்தோசமாக இருந்ததாகவும், பேரன்களோடு படம் பார்த்த போது உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திடீர் பாதிப்பு
இந்த நிலையில்தான் அவருக்கு நேற்று லேசான நெஞ்சுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இதயம் அல்லது வேறு உறுப்புகளுக்கு செல்லும் ரத்த குழாய்களில் இன்ஃபெக்ஷன் மற்றும் லேசான அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் கிடையாது.

இதய குழாய்
பொதுவாக நரம்புகளில் பாதிப்புகள், இதய அழுத்த பாதிப்புகள் அல்லது செயற்கையாக ஏற்பட்ட காயம், விபத்து போன்ற பாதிப்புகளால் இந்த பிரச்சனை ஏற்படலாம். இதனால் உடலில் சில உறுப்புகளுக்கு செல்லும் ரத்த அளவு குறைந்த திசுக்கள் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. ரஜினிகாந்திற்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

வருவார்
ரஜினிகாந்த் இதற்கு முன்பே பெரிய சிகிச்சைகளை எதிர்கொண்டு இருக்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று பெரிய சிகிச்சைகளை செய்து முழு உடல் நலத்துடன் திரும்பி இருக்கிறார். மிகப்பெரிய ஆபரேஷன்களுக்கு பின்பு கூட லிங்கா போன்ற அதிரடி படங்களில் துடிப்பாக நடித்தவர் நடிகர் ரஜினிகாந்த். இதனால் தற்போது செய்யப்படும் மருத்துவ சிகிச்சையில் இருந்தும் விரைவில் குணமடைந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றே நம்பப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications