கேஒய்சி என்றால் என்ன? அது அவசியமா? ஒவ்வொருவரும் அறிய வேண்டிய முக்கியமான விஷயம்
சென்னை: கேஒய்சி என்பது வங்கி கணக்கு சார்ந்த வார்த்தையாகும். "உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்" என்பதன் சுருக்கமே கேஒய்சி (know your customer) என்று அழைக்கப்படுகிறது..இதுபற்றி அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவினை இப்போது பார்ப்போம்.
"கேஒய்சி என்பது வங்கி கணக்கு சார்ந்த வார்த்தையாகும். "உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்" என்பதன் சுருக்கமே கேஒய்சி (know your customer) என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளரைப் பற்றித் தெரிந்து கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கும் வரையறைகளே இந்த கேஒய்சி என்பதாகும்.

ஒரு கணக்கின் உண்மையான உரிமையாளர் யார்? அந்தக் கணக்கின் நாமினி யார்? இந்த கணக்கிற்கு எங்கிருந்து பணம் வருகிறது? கணக்கு உரிமையாளரின் உண்மையான தொழில் என்ன? அவர் செய்யும் வங்கி நடவடிக்கைகளுக்கான உண்மையான காரணங்கள் என்ன போன்றவற்றை அறிய இந்த கேஒய்சி (KYC) வழிகாட்டுகிறது. மேலும் வாடிக்கையாளர் மூலம் பிற்காலத்தில் வங்கிக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் அதை வங்கி திறமையாக கையாள இந்த கேஒய்சி உதவுகிறது.
இந்த கேஒய்சியின் முக்கிய நோக்கமே ஹவாலா எனும் மணி லாண்டரிங் மற்றும் சட்டத்திற்கு புறம்பான பிற பண பரிவர்த்தனைகளை ஒழிப்பதாகும். அதாவது சட்டத்திற்கு புறம்பான பணத்தை ஒழிப்பதாகும்.
வாடிக்கையாளரின் இரண்டு தகவல்களை இந்த கேஒய்சி வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஒன்று வாடிக்கையாளரின் அடையாளம், மற்றொன்று வாடிக்கையாளரின் முகவரி. பொதுவாக வாடிக்கையாளரின் அடையாளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் வாடிக்கையாளரின் முகவரி மாற வாய்ப்பிருக்கிறது. எனவே வங்கிகள் அவ்வப்போது வாடிக்கையாளரின் முகவரியை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் வாடிக்கையாளரின் பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சரி பார்க்க வேண்டும்.
வங்கி கணக்கை தொடங்க தேவையான கேஒய்சி-யாக முகவரி சான்று, அடையாள சான்று மற்றும் புகைப்படம் கேட்கப்படுகிறது.

அடையாள சான்றிற்கு தேவையான ஆவணங்கள்:
அடையாள சான்றிற்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
இவற்றில் உங்களின் சரியான முகவரி இருந்தால் அவற்றையே முகவரி சான்றாகவும் கொடுக்கலாம். இல்லையெனில் முகவரியுடன் கூடிய வேறொரு சான்றை கொடுக்க வேண்டும்.
முகவரி சான்றிற்கு தேவையான ஆவணங்கள்:
முகவரி சான்றிற்கு டெலிபோன் பில், EB பில், கேஸ் பில், ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர் முகவரி மாற்றம் செய்யப்பட்டால் அதை வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். வங்கியும் வாடிக்கையாளரின் முகவரியை கவனிக்க வேண்டும்.
வங்கி, போஸ்ட் ஆபீஸ், வர்த்தகம் சார்ந்த துறைகளில் கேஒய்சி வாங்கப்படுகிறது.
கேஒய்சி என்றால் என்ன? அது அவசியமா?
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) September 10, 2023
கேஒய்சி என்பது வங்கி கணக்கு சார்ந்த வார்த்தையாகும். “உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்” என்பதன் சுருக்கமே கேஒய்சி (know your customer) என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளரைப் பற்றித் தெரிந்து கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கும்… pic.twitter.com/L5Y4PFhmdx
வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை பரிசோதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா?
ஆம் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் 1949ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7ல் சொல்லப்பட்டிருக்கும் மணி லாண்டரிங்கை தடை செய்தல் என்ற சட்டம் ஒரு வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை பரிசோதிக்க வழி செய்கிறது.
வங்கிகளில் செய்யப்படும் வைப்புத் தொகைகளுக்கும் கேஒய்சி பொருந்துமா?
வைப்புத் தொகைகளுக்கான வரையைறகளை மிகத் தெளிவாக ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. எனினினும் வைப்புத் தொகையில் முதலீடு செய்யும் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரி ஆகியவற்றை பரிசோதிப்பது என்பது சம்பந்தப்பட்ட வங்கியைப் பொருத்ததாகும். அவ்வாறு செய்வதன் மூலம் மணி லாண்டரிங்கைத் தடுக்க முடியும்." இவ்வாறு அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் தனது ட்விட் பதிவில் கூறியுள்ளார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications