Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமதாசின் படைத்தளபதி ஜி.கே.மணி! ஆசிரியர் டூ பாமக தலைவர்! ஒரே பதவியில் 25 ஆண்டுகள்! ருசிகர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியராக பணியை தொடங்கி ஒரு அரசியல் கட்சியின் தலைவராக 25 ஆண்டுகள் பயணித்த ஜி.கே.மணிக்கு பாமக பாராட்டு விழா நடத்துகிறது.

ராமதாசின் தளபதியாக திகழும் ஜி.கே.மணி யார் அவரது பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் அவரது பின்னணி குறித்த சிறிய தொகுப்பு இதோ;

வன்னியர் சங்கம்

வன்னியர் சங்கம்

வன்னியர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முன்பாக ட்ரிபிள் எஸ் என்றழைக்கப்பட்ட சமூக சேவை சங்கம் மூலம் ராமதாசுக்கு அறிமுகம் ஆகியிருந்தார் ஜி.கே.மணி. அவரது துடிப்பான செயல்பாடும் வேகமும் ராமதாஸை யார் இந்த மணி என யோசிக்க வைத்தது. ஜி.கே.மணி அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஆசிரியராக இருந்தவர்.

ஆசிரியர் பணி

ஆசிரியர் பணி

சொந்த ஊரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றை நடத்தி வந்த அவர், 1980-ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். அதன்பிறகு முழுநேரமாக பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தில் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார். ராமதாசுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கிய அவர் சேலம், தருமபுரி
மாவட்டங்களில் வன்னியர் சங்கக் கொடிகளை கிராமம் கிராமமாக ஏற்றி வைத்தார்.

தியாகச் செம்மல்

தியாகச் செம்மல்

வன்னியர் சங்கத்தில் ஜி.கே.மணி ஆற்றிய பணிகளை அங்கீகரித்து, 1984-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் ஜி.கே. மணிக்கு தியாகச் செம்மல் என்ற பட்டத்தை ராமதாஸ் வழங்கினார். 1986-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு வன்னியர் சங்க பிரதிநிதியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொண்டர் அணி

தொண்டர் அணி

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது, ஜி.கே.மணிக்கு ராமதாஸ் வழங்கிய முதல் பதவி தொண்டர் அணித் தலைவர் தான். அந்தப் பதவிக்கு பொருத்தமானவராக மணி செயல்பட்டார். 1996-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் பா.ம.க.வின் வேட்பாளராக போட்டியிட்ட ஜி.கே.மணி அதிமுக மற்றும் திமுக
கூட்டணி வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார். சங்கப் பணியாக இருந்தாலும், கட்சிப் பணியாக இருந்தாலும் ராமதாஸ் இட்ட பணியை தட்டாமல் செய்யும் தளபதியாக திகழ்பவர் மணி.

தலைவர் பதவி

தலைவர் பதவி

1998-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி திண்டிவனத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சிக்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது பா.ம.கவின் அடுத்த தலைவர் யார்? என்று ஒட்டுமொத்த தமிழக அரசியல் உலகமும் எதிர்பார்த்தது. ஊடகங்களில் பலரின் பெயர்கள் யூகிக்கப்பட்டன.

மறுப்பு இல்லை

மறுப்பு இல்லை

ஆனால், ராமதாஸ் மனதில் உதித்த பெயரோ ஜி.கே.மணி. அவரை பா.ம.க. தலைவராக கொண்டு வர விரும்புவதாக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசினார். யாரும்
மறுப்பேதும் சொல்லாமல் ஓர் மனதாக ஜி.கே.மணியை கட்சியின் தலைவராகவும் ராமதாஸை நிறுவனராகவும் ஏற்றுக்கொண்டனர்.

மென்மை -மரியாதை

மென்மை -மரியாதை

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓய்வறியாமல் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக ஓடத் தொடங்கினார். கட்சியினர் என்ன நினைக்கிறார்கள் அவர்களது மனவோட்டம் என்ன என்பது பற்றியெல்லாம் ராமதாஸிடம் ஒளிவுமறைவின்றி பேசபவர் ஜி.கே.மணி. இவரது வார்த்தைகளில் மென்மையையும், மரியாதையையும் காணலாம்.

தலைமையிடம் நல்ல பெயர்

தலைமையிடம் நல்ல பெயர்

யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே என்ற பழமொழி போல், கட்சி நிகழ்ச்சிகளில் இராமதாஸ் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜி.கே.மணி நிகழ்விடத்திற்கு சென்று நிகழ்ச்சிக்கான பணிகளை முன்னின்று நடத்துவார்.
இதேபோல் தலைமையிடம் மட்டும் நல்ல பெயர் வாங்கினோமோ என்றில்லாமல் பாமகவின் அடிமட்டத் தொண்டர் ஒருவரின் குறைகளை களையவும் தீவிரம் காட்டுவார்.

அக்கறை காட்டுவார்

அக்கறை காட்டுவார்

பாமகவின் அடிமட்டத் தொண்டர் முதல் மாநில நிர்வாகிகள் வரை எவராவது ஒரு பிரச்சினை என்று அழைத்தால், அவர்களின் குறை என்ன? என்பதைக் கேட்டு கட்சிப் பிரச்சினையாக இருந்தால் ராமதாஸ் கவனத்திற்கும், அலுவல் சார்ந்த பிரச்சனையாக இருந்தால் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு சென்று தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டுவார்.

12 முறை தலைவர்

12 முறை தலைவர்

1998-ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை தொடர்ந்து 12 முறை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 25-ஆவது ஆண்டாக இந்தப்
பதவியை அவர் வகித்து வருகிறார். கலைஞர், எம்.ஜி.ஆரில் தொடங்கி இன்று முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் வரை கடந்த 50 ஆண்டுகளில் அனைத்து தலைவர்களுடனும் ஜி.கே. மணிக்கு அறிமுகம் உண்டு.

பாராட்டு விழா

பாராட்டு விழா

கட்சிப் பணிகளை செய்து முடிப்பதில் ஜி.கே.மணி எனது தளபதி என்றும் உணர்வுகளை
அறிந்து செயல்படுவதில் அவர் எனது மனசாட்சி எனவும் ராமதாஸ் இவரை பற்றி மனம்
திறந்து பாராட்டவும் செய்திருக்கிறார். தலைவர் பதவியில் வெள்ளிவிழா காணும் ஜி.கே.மணிக்கு இந்த வாரம் சென்னையில் பெரியளவில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+