Exclusive: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை: விமர்சனம் + பாராட்டு! அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பும் மற்றொரு தரப்பினர் ஆட்சேபனையும் தெரிவித்து வரும் சூழலில், அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை அறிவதற்காக ஒன் இந்தியா தமிழ் சார்பாக சிலரிடம் தொடர்புகொண்டு பேசினோம்.
அப்போது அவர்கள் நம்மிடம் பகிர்ந்த விவரம் பின்வருமாறு;

ஜெயக்குமார்(அதிமுக)
''பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது ஏற்கனவே அனைவரும் எழுந்து நின்று தான் வருகிறோம். யாரும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுக்காமல் இல்லை. இதனால் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு எந்த ஆச்சரியத்தையும் எனக்கு கொடுக்கவில்லை. இவர் அறிவிக்காவிட்டாலும் கூட தமிழர்கள் நிச்சயம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுப்பார்கள்''.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்)
''தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்துள்ள முதலமைச்சருக்கு நன்றியும், வரவேற்பும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுத்து எழுந்து நின்று வந்தாலும் கூட, அண்மையில் வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் காரணமாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன்.''

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ்)
''ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழிப்பாடல் இருக்க வேண்டியது அவசியம். இந்தியா என்பது அனைத்து மாநிலங்களின் கூட்டு ஆகும். நான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான பிறகு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது சத்தியமூர்த்தி பவனில் வந்தே மாதரம் பாடிய பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நடைமுறைப்படுத்தி இருக்கிறேன். இதனால் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறேன்.''

குஷ்பு (பாஜக)
''தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது இதுவரை யாரும் உட்கார்ந்திருந்து நான் பார்த்ததில்லை. காலம்காலமாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுத்து எழுந்து நிற்பது வழக்கத்தில் இருக்கிறது. இதனால் இதற்காக ஒரு புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. எது எப்படியோ தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ய வேண்டியது தொடர்பான அறிவிப்பை நல்ல விஷயமாக பார்க்கிறேன்.''

அருள் (பாமக எம்.எல்.ஏ.)
''இத்தனை நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்பதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறோம். இருந்தாலும் இதை சட்டப்பூர்வமாக அரசு அறிவித்திருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டுமா என கேள்வி எழுப்புகிறவர்களுக்கு எனது கண்டனத்தை ஒன் இந்தியா தமிழ் சார்பில் பதிவு செய்துகொள்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்ததற்காக முதலமைச்சருக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.''

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)
''தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில அரசின் பாடலாக அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. தற்போதைய சூழலில் இந்த அறிவிப்பு அவசியமான ஒன்று எனக் கருதுகிறேன். இதற்காக அரசை நான் பாராட்டுகிறேன்''.

கொங்கு ஈஸ்வரன் (கொ.ம.தே.க.)
''எந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டாலும் பொதுவாகவே நமது கால்கள் ஆட்டோமெட்டிக்காக எழுந்து நின்றுவிடும். இதுவரை சட்டப்பூர்வமாக இல்லாத நிலையிலும் நாம் மரியாதை கொடுத்து வருகிறோம், இப்போது சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி எல்லோருமே எழுந்துதான் நிற்கனும். யாரும் விதிவிலக்கு பெறமுடியாது. 99.9 சதவீதம் பேர் ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுத்து வருகிறார்கள். மீதமிருக்கும் அந்த 1 சதவீதத்தினருக்காக தான் இந்த அறிவிப்பையே முதல்வர் வெளியிட்டுள்ளதாக கருதுகிறேன். ஒரு சிலர் விதண்டாவாதம் பேசிக்கொண்டு வேண்டுமென்றே இதை எதிர்க்கலாம். ஆனால் இனி அவர்களும் எழுந்து நிற்பதை தவிர வழியில்லை.''
Recommended Video

தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி)
''மிகச் சரியான நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்காக அவருக்கு நான் நன்றியும், வாழ்த்தும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்களை இந்த அறிவிப்பு மகிழ்ச்சிக்கொள்ளச் செய்துள்ளது.''
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications