சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கிள்ஸுக்கு இனி கவலையில்லை.. வாவ்.. புதிய வசதியை அறிமுகம் செய்கிறது வாட்ஸப்.. என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தகவல் பரிமாற்றத்திற்கு எளிமையாக அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்பட்டிருப்பதால் அதன் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த செயலியில் புதிய அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. அதாவது நமக்கு நாமே மெஸேஜ் அனுப்பிக்கொள்ளும் வசதிதான் அது.

இது தற்போது சில குறிப்பிட்ட 'பீட்டா' வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவாக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.

 தினேஷ் கார்த்திக் சொன்னது சரிதான்! இக்கட்டிலும் முழு சப்போர்ட்! அந்த ஒரு வார்த்தை! கலங்கடித்த ரோஹித் தினேஷ் கார்த்திக் சொன்னது சரிதான்! இக்கட்டிலும் முழு சப்போர்ட்! அந்த ஒரு வார்த்தை! கலங்கடித்த ரோஹித்

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி ஏறத்தாழ 200 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றத்திற்கு எளிமையாக அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டிருப்பதால் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்றாற்போல இந்த செயலியும் புதுப்புது அப்டேட்களை கொடுத்துவருகிறது. பயன்பாட்டாளர்களையே ஸ்டிக்கராக மாற்றும் வசதி, குழு கருத்துக்கணிப்புகளை உருவாக்கும் அம்சம் என இதன் அப்டேட்கள் நீண்டு வருகிறன.

அப்டேட்

அப்டேட்

ஆனால் பயனாளர்களின் தேவையை எவ்வளவுதான் பூர்த்தி செய்தாலும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லையென தெரிந்துகொண்ட நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை அறிவிக்க உள்ளது. அதாவது, நம்மில் பெரும்பாலானோர் கடைக்கு போகும்போதும், அல்லது அலுவலகத்தில் இருக்கும்போதும் ஏதும் முக்கிய தகவல்களை எழுதிக்கொள்ள பேனா பேப்பரை தேடாமல் அதற்கென வாட்ஸ்அப்பில் சேமித்து வைத்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பி வைத்திருப்போம். இது அப்படியே இருக்கும். சிலர் தங்களை பிளாக் செய்த காதலி/காதலன் நம்பரை இதுபோல பயன்படுத்தி வருவார்கள்.

புதிய வசதி

புதிய வசதி

இதனை கவனித்த வாட்ஸ்அப், "இதுக்கு ஏங்க மத்தவங்க நம்பர யூஸ் பண்றீங்க? ஒரு வேலை அவங்க உங்கள அன்பிளாக் (unblock) செஞ்சுட்டா? மொத்த மானமும் கப்பலேறிடுமே.. ஸோ இனி நீங்களே உங்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கலாம்" என்கிற பாணியில் புதிய அப்டேட்டை அறிவிக்க தயாராகி வருகிறது வாட்ஸ்அப். அதன்படி இனி நீங்களே உங்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம். அதை எப்போது எடுத்து பார்த்தாலும் அப்படியேதான் இருக்கும். இந்த அப்டேட்டில் 'me' என்கிற பெயரில் உங்கள் நம்பர் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நாம் இவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம்.

விரைவில்

விரைவில்

வாட்ஸ்அப் பீட்டா அண்ட்ராய்டு பதிப்பு 2.22.24.2ல் இந்த புதிய மெசேஜ் வசதி இடம் பெற்றிருக்கும். தற்போது பரிசோதனை முறையில் சில குறிப்பிட்ட 'பீட்டா' வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சில மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் இதன் மூலம் கண்காணிக்கப்பட்டு பின்னர் அடுத்து வரும் நாட்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி விரிவாக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. "தகவல்கள் திருடப்படுவதால் வாட்ஸ்அப் செயலியிடமிருந்து விலகி இருங்கள்" என கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The use of WhatsApp is constantly increasing as it is designed to be used by people of all ages to easily exchange information. In this case, Facebook is going to bring a new feature in this app. That is, it is the facility to send messages to ourselves. It is currently only being rolled out as a test to certain 'beta' customers. The service is said to be extended to all customers soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X