"இதுவா, அதுவா".. சிவசங்கர் ஏன் அப்டி சொல்றாரு.. ஸ்டாலினை விடாமல் விரட்டி துளைக்கும் டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் இலவச பஸ் பயணம் குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார்
சென்னை: டிடிவி தினகரனுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வந்துள்ள நிலையில், அதை ட்வீட் போட்டு திமுக அரசிடமே கேள்வியாக எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, விடாமல் விமர்சித்தும் குறை சொல்லி கொண்டுமிருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான்.. அவருக்கு அடுத்தபடியாக திமுக மீது பாய்ந்து கொண்டே இருப்பவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிடிவி தினகரன்தான்.
திமுக அரசு எத்தனையோ அதிரடிகளை கொண்டுவந்தாலும், இலவசங்களை அறிவித்தாலும், அத்தனையும் எதிர்தரப்பினர் விமர்சித்து கொண்டே இருக்கின்றனர்..

7 லட்சம் கோடி
அந்த வகையில், டிடிவி தினகரன், திமுகவின் இலவசங்களை விரும்பவில்லை. இதுகுறித்து ஒருமுறை செய்தியாளர்களிடம் தினகரன் பேசியிருந்தார்.. "இலவசங்களை கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவதை விட, அவர்களே சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.. தமிழக அரசு ஏழு லட்சம் கோடி கடனில் உள்ளது. இப்போது இந்த அரசு இலவச திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் வேலையே தவிர வேறில்லை" என்று கூறியிருந்தார்.

சிவசங்கர்
அந்த வகையில், இப்போதும் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.. 2 நாட்களுக்கு முன்பு, தமிழக சட்டசபையில் போக்குவரத்துத்துறை சம்பந்தமான புதிய அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.. அதில் மிக முக்கியமானதாக, 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பஸ்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்" என்று அறிவித்திருந்தார்.

டிடிவி தினகரன்
இந்த அறிவிப்பைதான் மீண்டும் தினகரன் விமர்சித்துள்ளார்.. 'வெறும் கவர்ச்சி அறிவிப்புகளை கொடுத்தே மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திவிடலாம் என்று தி.மு.க நினைக்கிறது போலும்.. இதோ... இன்னொரு வெற்று அறிவிப்பாக '5 வயதிற்குட்பட்டவர்கள் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம்' என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிக்கிறார்.

மடியில் அமர வேண்டுமா?
ஆனால், உட்கார்ந்து கொண்டு வரவேண்டுமானால் 5 வயதிற்குட்பட்டவர்கள் பயணச்சீட்டு வாங்க வேண்டுமென அவரது துறை அறிக்கை விடுகிறது. இதில் எது உண்மை? பயணம் இலவசம் என்றால் சிறுவர், சிறுமியர் நின்றுகொண்டு வரவேண்டும் அல்லது பெற்றோர் மடியில் அமர வேண்டுமா? அப்படியெனில் எதற்காக இத்தகைய அறிவிப்பை அமைச்சர் கொடுக்க வேண்டும்? இதையெல்லாம் பார்க்கும்போது, "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! தமிழ்நாட்டிலே..." என்ற புரட்சித்தலைவர் படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது என்று டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

சின்னம்மா
இதற்கு ட்விட்டர்வாசிகளும் திரண்டு பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. "உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது என்றாலும்...உங்கள் முந்தைய அரசாங்க ஆட்சியிலும் இதுபோன்ற ஏராளமான வெற்று அறிவிப்புகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது" என்று நாசூக்காக தினகரனை தாக்கி உள்ளார்.. அடுத்த கட்சியை குறை சொல்வதை விட்டுட்டு சின்னம்மாவ கட்சியில் சேர்க்க பாருங்க என்று ஒருவர் ட்வீட் போட்டுள்ளார்.

புரியலயா?
அதேபோல இன்னொருவரோ, "தாங்கள் அதை சரியாக புரியவில்லை போலும். சிறுவர்கள் அனைவருக்கும் பயணச்சீட்டு கொடுக்கப்படும் அதற்கு அவர்கள் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. இம்மாதிரியான செயல் முறை அரசுக்கு எத்தனை சிறுவர்கள் பயணிக்கிறார்கள் எனக்கு விவரம் அதற்கான செலவு என்ன என்பதையும் மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும்" என்று டிடிவி தினகரனின் சந்தேகத்துக்கு பதிலளித்துள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications