சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்ரா கேஸில் முக்கிய க்ளூ.. "தென்மாவட்ட" புள்ளியாமே.. ஈஎம்ஐ கட்டியவர் யார்.. பரபர யூகங்கள்

நடிகை சித்ராவுடன் தொடர்பில் இருந்த 4 அரசியல் புள்ளி யார் என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: சின்னத்திரை சித்ரா, இறந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், தற்போதுதான் விஷயம் வெடித்து கிளம்பி உள்ளது.. திடீர் திடீரென புது புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், சித்ராவின் உயிருக்கு 4 பேர்தான் பின்னணி காரணம் என்றும், அந்த 2 மாஜி அமைச்சர்தான் என்றும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும் ஹேமந்த் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

அதுவும், போலீசார் பிடியில் இருந்தபோது ஹேமந்த் யாரை பற்றியும் சொல்லாமல், கோர்ட்டில் ஜாமீன் வாங்கி வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.. இப்போதுதான் முதல்முறையாக மீடியா பக்கம் இதை பற்றி பேட்டி தந்துள்ளார்.

விஸ்வரூபமாகும் Vj சித்ரா மரணம்..! என்னயவே ஏன் கேக்குறீங்க! கடுப்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! விஸ்வரூபமாகும் Vj சித்ரா மரணம்..! என்னயவே ஏன் கேக்குறீங்க! கடுப்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

எம்எல்ஏ

எம்எல்ஏ

இதனிடையே, விஜே சித்ராவின் அம்மா, வெப்சைட் ஒன்றுக்கு 2 நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "இப்போது ஹேமந்த் சொல்வதை 2 வருஷத்துக்கு முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே., எம்எல்ஏவுக்கு தொடர்பு இருக்கு மற்றவர்களுக்கு தொடர்பு இருக்கு என்பதை அப்போதே சொல்லியிருந்தால், ரெண்டு குடும்பமும் சேர்ந்து போலீஸில் கம்ப்ளையன்ட் கொடுத்திருக்கலாமே.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

ரெண்டு வருஷமா அமைதியா இருந்துட்டு இப்போ வந்து ஏன் சொல்லணும்? 2 வருஷமா போதையில இருந்து இப்போதான் தெளிஞ்சியா? இல்ல கோமாவில் இருந்தீயா? இப்போவரைக்கும் எனக்கு ஒரு போன் பண்ணல. உடலை சரியா போஸ்ட்மார்ட்டம் பண்ணல, உண்மையா போஸ்ட் மார்ட்டம் பண்ணனும்".. என்று சித்ரா அம்மா கலங்கிபோய் கூறியிருந்தார். இந்நிலையில், வேறு சில தகவல்கள் கசிந்து வருகின்றன.

 4 பேர்

4 பேர்

அதிமுக மாஜி அமைச்சர், அமைச்சரின் வாரிசு என பலருக்கும் சித்ராவுடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள்.. அவர்கள் யார் என்பதுதான் முதல் கேள்வி.. அதேபோல சித்ரா அவரது துறையில் சிலருடனும் டேட்டிங் இருந்தாராம்.. அவர்கள் யார் என்பது 2வது கேள்வியாகும்.. சித்ரா 4 பேரை காதலித்து பிறகு, அது பிரேக் அப் ஆகிவிட்டதாம்.. அந்த 4 பேர் யார் என்பது 3வது கேள்வியாகும்.. கடைசியாக அரசியல் புள்ளிகளின் பார்வையில் சித்ரா பட்டுள்ளார்..

தென்மாவட்டம்

தென்மாவட்டம்

அதன்படி, லீலா பேலஸில் முன்னாள் அமைச்சர் ஒருவர் சந்தித்து பேசினாராம்.. அவர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்.. சித்ராவை அடிக்கடி நேரில் பார்க்க முடியாது என்பதால், சித்ராவுக்கும் அமைச்சருக்கும் சென்னையின் முக்கிய விஐபி ஒருவர் தூதாக இருந்திருக்கிறார்.. அது யார் என்பது 4வது கேள்வியாகும்.. சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, ஒரு விஐபி கார், ரிசார்ட்டுக்கு சென்றது.. அந்த கார் யாருடையது என்பது 5வது கேள்வியாகும்...

 அப்பார்ட்மென்ட்

அப்பார்ட்மென்ட்

இறுதியாக, விலைஉயர்ந்த ஆடி கார், சொந்த அப்பார்ட்மென்ட், போன்றவற்றிற்கு சித்ரா தான் ஈஎம்ஐ கட்டியதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிகளே ஈஎம்ஐ கட்டியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.. அப்படியானால் அவர்கள் யார் என்பது 6வது கேள்வியாகும்.. இதெல்லாம் கேள்விப்பட்டுதான், சித்ராவின் ரசிகர்கள் மனம் கொந்தளித்து உள்ளனர்..

நியாயம்

நியாயம்

சித்ராவை மிரட்டும் மாஜிக்கள் பற்றி தனக்கு தெரியும் என்று ஹேமந்த் சொல்லி உள்ளதால், அந்த மாஜிக்களை போலீசார் விசாரிக்க வேண்டி உள்ளது.. அதேபோல, ஹேமந்த் நல்லவன் இல்லை, சித்ராவை அடித்து தொங்கவிட்டுள்ளனர் என்று ஆரம்பம் முதல் கதறி வரும் சித்ராவின் தோழி ரேகாவையும் விசாரிக்க வேண்டி உள்ளது.. இறுதியாக, இந்த வழக்கில் அடிபட்டு அனைத்து அரசியல் தலைகளையும் தயவுதாட்சண்யம் இல்லாமல் விசாரித்தாலே போதும் என்பதே சித்ரா ரசிகர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது..!

English summary
who is that ex ministers son and sitting mla in connection with vj chitras case நடிகை சித்ராவுடன் தொடர்பில் இருந்த 4 அரசியல் புள்ளி யார் என்று தெரியவில்லை
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X