சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது "உள்ளாட்சித் துறை" அமைச்சர் கே.என்.நேருவா.. பேப்பரை பார்த்து சொன்ன மேயர் பிரியா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சரவையிலேயே இல்லாத ஒரு துறையை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் சென்னை பெரு மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்.

Recommended Video

    Chennai Mayor Priya-வை அதட்டிய அமைச்சர் KN Nehru *Politics

    திமுக ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சித் துறை என்ற பெயர் முழுமையாக நீக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி என இரண்டு துறைகள் வெவ்வேறு பெயர்களில் உருவாக்கப்பட்டன.

    இந்நிலையில் அது தெரியாமல் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு என யாரோ எழுதிக் கொடுத்ததை பார்த்து படித்து தனது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார் பிரியா ராஜன்.

    மெட்ராஸ் பெயரை சென்னையாக மாற்றியது திமுக அரசு.. செம்மொழி தமிழ் விருது விழாவில் முதல்வர் பெருமிதம்மெட்ராஸ் பெயரை சென்னையாக மாற்றியது திமுக அரசு.. செம்மொழி தமிழ் விருது விழாவில் முதல்வர் பெருமிதம்

    சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சி

    நமது சென்னை நமது பெருமை என்ற பெயரில் சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக சென்னை பெரு மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது தனக்கு யாரோ எழுதிக் கொடுத்த பேப்பர் ஒன்றை பார்த்து அதை செய்தியாளர்கள் மத்தியில் படித்துக் கொண்டிருந்த மேயர் பிரியா ராஜன், அமைச்சர் நேருவை அந்தப் பேப்பரில் இருந்ததை பார்த்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எனக் குறிப்பிட்டார்.

    மேயர் பிரியா ராஜன்

    மேயர் பிரியா ராஜன்

    அமைச்சரவையிலேயே இல்லாத ஒரு துறைக்கு நேரு எப்படி அமைச்சராக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவதோடு மேயர் பிரியா ராஜனுக்கு இவ்வாறு யார் எழுதிக் கொடுத்தது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேயர் பிரியா ராஜனை சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு இது போன்ற தவறான தகவல்கள் எழுதிக் கொடுக்கபடுகிறதா என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

    யார் எழுதிக் கொடுத்தது?

    யார் எழுதிக் கொடுத்தது?

    இதனிடையே யார் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை பார்த்து அப்படியே படிக்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டு வகிக்கும் பதவிக்குரிய பொறுப்புடன் பிரியா ராஜனும் இனி தனது பேச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த நிகழ்வின் போது மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நேரு, மழை நீர் தேங்கி நிற்காத வகையில் பல இடங்களில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 90 சதவீதத்திற்கும் மேல் இந்தாண்டு தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

    பணிகள் வேகமாக

    பணிகள் வேகமாக

    ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றால் ஒரே நாளில் அது அப்புறப்படுத்தப்படும் என்ற உறுதியையும் அளித்தார். இதனிடையே மழைநீர் வடிகால் பணிகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களை அழைத்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

    English summary
    Chennai Corporation Mayor Priya Rajan: தமிழக அமைச்சரவையிலேயே இல்லாத ஒரு துறையை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் சென்னை பெரு மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X