கவனிச்சீங்களா!தமிழ்நாடு மட்டுமல்ல.. திரண்டு வந்த தென்னிந்திய தலைவர்கள்.. ஹிந்திக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: ஹிந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது தேசிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. பொதுவாக இந்த விவகாரத்தில் தமிழ்நாடுதான் ஹிந்தி திணிப்பை எதிர்க்கும்.. ஆனால் இந்த முறை கதையே வேறு!
உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன் ஹிந்தி குறித்து தெரிவித்த கருத்துதான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்திக்கு ஆதரவாக பேசினார்.
அதில், பள்ளி மாணவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.

அடிப்படை அறிவு
ஹிந்தி தேர்வுகளில் இந்தியா முழுக்க இருக்கும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும். ஹிந்திதான் நம்முடைய அலுவல் மொழி. இதை நம் நாட்டி ஒருமைப்பாட்டின் அங்கமாக மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும். மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல ஆங்கிலத்திற்கு மாற்றாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

தென் மாநிலங்கள் எதிர்ப்பு
பொதுவாக இந்தி திணிப்பு விவகாரம் எழும் போதெல்லாம் அதை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கும். சுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே இந்தியை தமிழ்நாடு எதிர்த்து வந்து இருக்கிறது. தமிழ்நாட்டை போலவே அவ்வப்போது கர்நாடகாவும் இந்தி திணிப்பை எதிர்த்து இருக்கிறது. ஆனால் இந்த முறை.. இந்த இரண்டு மாநிலங்கள் தவிர வேறு சில மாநிலங்களில் இருந்தும் இந்தி திணிப்பிற்கு எதிரான குரல்கள் மற்ற மாநிலங்களில் இருந்தும் வலுவாக வந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
இந்தி திணிப்பிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்தில், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா?

ஒற்றை மொழி
ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்! , என்று விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த அரசியல் தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான எம்பி ஜெய்ராம் ரமேஷ் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ஹிந்தி என்பது அலுவல் மொழி தான். அது தேசிய மொழியல்ல என உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் கூறினார்.

ஹிந்தி தேசிய மொழி இல்லை
ஹிந்திக்கான ஏகாதிபத்தியம் என்பது இந்தியாவுக்கான சாவு மணியாக இருக்கும். எனக்கு ஹிந்தி வசதியாக இருக்கிறது. ஆனால் அதை கட்டாயப்படுத்தி ஒருவரின் தொண்டையில் திணிக்க நான் விரும்பவில்லை. இத்தகைய செயலை செய்யும் அமித் ஷா ஹிந்திக்கு அவமரியாதை செய்கிறார்'' என்றார். நேற்று சிபிஎம் மாநாட்டில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ஹிந்தி திணிப்பு எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சி.

போர்க்குரல்
மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது ஹிந்து அல்லாத மக்களுக்கு எதிராக மத்திய அரசின் போர்க்குரல், என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இதேபோல் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, அமித் ஷா தவறாக பேசி உள்ளார். அவரின் கருத்துக்கு கடும் கண்டனங்கள். ஒரு கன்னடராக இதை எதிர்க்கிறேன். ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி கிடையாது. அவரின் பார்வை போலி தேசியவாதியான சாவக்கரின் பார்வை ஆகும். அவர் தனது தாய்மொழியான குஜராத்திக்கும் துரோகம் செய்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

கேடிஆர்
அதேபோல் தெலுங்கானா அமைச்சரும், டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவருமான கேடி ராமா ராவ் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியை ஒரு போதும் எங்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மொத்தமாக தென்னிந்திய தலைவர்கள் பலர் ஹிந்தி திணிப்பை இந்த முறை எதிர்த்து உள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணித்தால் அதை கடுமையாக எதிர்ப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications