சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு.. முதலில் யாருக்கு முன்னுரிமை?.. மாநகராட்சி ஆணையர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் முதற்கட்டமாக 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பாரத்பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அது போல் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கோவிஷீல்டு எனும் தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வரலாம் என்பதால் இரு நிறுவனங்களும் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளன.

தடுப்பு மருந்து

தடுப்பு மருந்து

அந்த வகையில் அடுத்த ஆண்டு இவற்றை மக்களின் அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது. தமிழகத்தில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக, மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் முன்னுரிமை அடிப்படையில், யாருக்கெல்லாம் தடுப்பூசி வழங்கலாம் என்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சி ஆணையர்

மாநகராட்சி ஆணையர்

குறிப்பாக தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டவுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பூசியை முதலில் யாருக்கு அளிப்பது என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

உணவு தயாரிப்பு

உணவு தயாரிப்பு

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சென்னையில் 15 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் 60 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 300 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்து தரமான உணவை சுடச்சுட தயாரித்து வழங்குகிறோம்.

60 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள்

60 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள்

இன்னும் சில நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டும். இதனால் சென்னையில் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களுக்கும், 2-ஆம் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும் 3ஆம் கட்டமாக முதியவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

English summary
Chennai Corporation Commissioner Prakash says that 60 thousand people will get corona vaccine in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X