Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புஷ்பா".. செம்மரக்கடத்தல் புள்ளிக்கு பாஜக பதவி? 2 மணி நேரத்தில் அண்ணாமலை போட்ட ஆர்டர்! நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் பொறுப்பு செம்மரக்கடத்தல் புள்ளி ஒருவருக்கு வழங்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின் கட்சி நிர்வாகிகள் பலர் மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர். கிட்டத்தட்ட 9 மாதங்களாக நிர்வாகிகள் மாற்றம் நடக்காமல் இருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன் நிர்வாகிகள் மாற்றம் அதிரடியாக நடந்தது. பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

நிர்வாகிகள் மாற்றம்

நிர்வாகிகள் மாற்றம்

மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவில் கட்சி ரீதியாக நிர்வாகிகள் பட்டியல் ஏற்கனவே மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நிர்வாகிகளை மாற்றி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். பாஜக மாநிலச் பார்வையாளர்களாக கராத்தே தியாகராஜன், எஸ்.ஜி.சூர்யா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் தொடர்கிறார்; இணைப் பொருளாளராக எம்.சிவசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சூர்யா

சூர்யா

இந்த நிலையில்தான் நிர்வாகிகள் மாற்றம் நடத்த சில நாட்களில் பாஜகவில் திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். கடந்த மே 8ம் தேதி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சூர்யா சிவா திடீரென பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது திருச்சி சிவா மகன் சூர்யா சிவா மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெங்கடேசன்

வெங்கடேசன்

இந்த நிலையில் மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் அணியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக கே வெங்கடேசன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் அண்ணாமலை முன் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் இணைந்த சில நாட்களில் அவருக்கு இந்த பொறுப்பு கடந்த 13ம் தேதி வழங்கப்பட்டது. இந்த பதவி வழங்கப்பட்டது பெரிய சர்ச்சையானது. காரணம் இவர் மீது செம்மரக்கடத்தல் புகார் உள்ளது.

செம்மரக்கடத்தல்

செம்மரக்கடத்தல்

ஆந்திர போலீசார் 2015ல் இவர் மீது செம்மரக்கடத்தல் புகாரை வைத்தனர். அதோடு அதே வருடம் ஆந்திர போலீஸ் மூலம் இவர் கைதும் செய்யப்பட்டார். செம்மரங்களை கடத்தி வெளிநாட்டிற்கு அனுப்பியதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது போல ரெட்ஹில்ஸ் காவல்நிலையத்தில் இவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒன்று கொலை முயற்சி வழக்கு.

என்ன புகார்?

என்ன புகார்?

2011ல் வெங்கடேசன் குண்டாஸ் வழக்கிலும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். முன்னதாக அதிமுக இளைஞரணியில் இவர் இருந்தார். அதோடு இளைஞரணி துணை செயலாளர் பொறுப்பு வரை வகித்தார். பின்னர் செம்மரக்கடத்தல் புகார் காரணமாக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சில காலமாக ரியல் எஸ்டேட் பணிகளை செய்து வந்தவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அப்போதே பாஜகவினர் உட்பட பலர் இதை விமர்சனம் செய்தனர்.

 விமர்சனம் செய்தனர்

விமர்சனம் செய்தனர்

புஷ்பா படத்தில் வருவது போல இவர் செம்மரங்களை கடத்த கூடியவர். அவருக்கு போய் உயர் பதவியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதனால் பாஜகவினர் இடையே விவாதம் ஏற்பட்டது. வேறு நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்கலாமே.. ஆளா இல்லை.. என்று கேள்விகளை எழுப்ப தொடங்கினர். இந்த நிலையில்தான் பதவி கொடுக்கப்பட்ட 2 மணி நேரத்தில் வெங்கடேசன் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவரை நீக்கிவிட்டு அவரின் பெயர் இல்லாத வேறு அறிக்கை அதன்பின் பாஜக மூலம் வெளியிடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+