Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென தவெகவிற்கு ஆதரவாக பேசிய.. காங்கிரஸ் மூத்த தலை! திமுகவை சீண்டல்! யாரிந்த பிரவீன் சக்ரவர்த்தி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி செய்துள்ள போஸ்டில், இந்திய அரசியல் கட்சிகள், தங்கள் தலைவர்களின் பேரணிகளுக்குப் பெரும் கூட்டத்தைக் கூட்ட கணிசமான நேரம், பணம் மற்றும் உழைப்பைச் செலவிட்டு வருகின்றன. ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் நிலைமை இதற்கு நேர் எதிரானது. தங்கள் பேரணிகளில் அதிக மக்கள் கூடுவதால், கூட்டத்தைக் குறைப்பதே அவர்களுக்குள் சவாலாக உள்ளது, இது பலருக்கும் வியப்பளிக்கிறது என்று விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தை பாராட்டுவது போல பேசி இருந்தார்.

congress

தவெக குஷி

பிரவீன் சக்ரவர்த்தியின் இந்த போஸ்ட் காரணமாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிங்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். அடடா காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் எங்களை பாராட்டுகிறார். விஜயை புகழ்கிறார். எங்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்.

அவ்வளவுதான் போங்க .. திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிகிறது. காங்கிரஸ் எங்கள் பக்கம் வரப்போகிறது. அதற்கான எடுத்துக்காட்டுதான் இது. ஒவ்வொரு காங்கிரஸ் நிர்வாகியாக பேச தொடங்கிவிட்டனர். இவர் விஜயை பாராட்டுகிறார். இன்னும் பல காங்கிரஸ் நிர்வாகிகள் இப்படி பாராட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிங்கள் உற்சாகம் அடைந்து போஸ்ட் போட்டு வருகின்றனர்.

யாரிந்த பிரவீன் சக்ரவர்த்தி?

காங்கிரஸ் நிபுணர்கள் & தரவு பகுப்பாய்வு குழுவின் தலைவராக பிரவீன் சக்ரவர்த்தி இருக்கிறார். இவர் முன்னாள் மைக்ரோசாப்ட்/ஐபிஎம்/வால் ஸ்ட்ரீட் பொருளாதாரம் பிரிவுகளில் பணிகளை செய்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் இவர் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட இருந்தது. ஆனால் திமுக இதை கடுமையாக எதிர்த்தது. இவருக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் இருக்கும் மோதல் உலகம் அறிந்தது.

இதன் காரணமாகவே அவரை கடுமையாக எதிர்த்தது. அப்போதே இவர் ஆட்சியில் பங்கு கேட்டு விவாதங்களை ஏற்படுத்தி இருந்தார். அப்போது திமுக எதிர்ப்பால் இவருக்கு பதிலாக சுதாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியாக வெற்றியும் பெற்றார். அதன்பின் ராஜ்ய சபாவிற்கு இவர் செல்ல முயன்றார். ஆனால் இதற்கு எதிராகவும் காங்கிரஸிடம் திமுக பிரஷர் போட்டதாக கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான் பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. தவெக ஆதரவை விட திமுக எதிர்ப்பின் காரணமாகவே இவர் இப்படி போஸ்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தவெக ஏமாற்றம்

காங்கிரஸ் தங்கள் பக்கம் வருமே என்று எதிர்பார்ப்பில் இருக்கும் தவெகவிற்கு ஏமாற்றம் தரும் விதமாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. .

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் அமைத்த ஐந்து பேர் கொண்ட குழு, புதன்கிழமை, இன்று திமுக தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்கவுள்ளது. இதில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த தலைவர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

congress

திமுக காங்கிரஸ் அறிமுக கூட்டம்

இச்சந்திப்பு ஒரு அறிமுகக் கூட்டம் மட்டுமே என்றும், தற்போது தொகுதிப் பங்கீடு குறித்த எந்த விவாதங்களும் நடைபெறாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் இன்று எத்தனை இடங்கள் வேண்டும் என்ற முதல் கட்ட விருப்பம் தெரிவிக்கப்படும்.

"இது எங்கள் முதல்வருடனான முதல் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே," என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அமைத்த இந்தக் குழுவுக்கு கிரிஷ் சோடங்கர் தலைமை தாங்குகிறார். திமுக கூட்டணியில் இருந்து விலகி TVK கட்சியுடன் காங்கிரஸ் இணையலாம் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இக்குழுவின் நோக்கம். குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், திமுக உருவாக்கும் இதேபோன்ற குழுவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+