திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை?
சென்னை: திமுகவில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தூத்துக்குடி எம்பி கனிமொழி, சென்னை மேயர் பிரியா, கோவை சமூக வலைதள பிரபலம் வைஷ்ணவி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு சீட் கிடைக்கவில்லை.. அதேநேரம் எழும்பூர் தொகுதியில் போட்டியிட திமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.. ஏன் அவர்களுக்கு எல்லாம் சீட் கிடைக்கவில்லை.. எப்படி தமிழன் பிரசன்னாவிற்கு மட்டும் சீட் கிடைத்தது என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறிய தகவல்களை பார்ப்போம்.
2026 சட்டமன்றத் தேர்தல் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைபேட்டி நிலவுகிறது.விஜய்யின் வருகை தான் இதில் திமுக, அதிமுகவிற்கு உள்ள பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. அதன் கூட்டணி அமைத்து வலுவாக போட்டியிடுகின்றன அதிமுக, திமுக.. எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

ஆனால் ஆளுங்கட்சியான திமுக வெளியிட்டுள்ள 164 வேட்பாளர்கள் பட்டியலில், பல பிரபலங்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் சோன முத்தா பேச்சா என்ற ரீதியில் சீட் கிடைக்காதவர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்... அதேநேர தமிழன் பிரசன்னா உள்பட பலருக்கும் சீட் கிடைத்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
திவ்யா சத்யராஜ்
கோவை தெற்கு அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் திவ்யா சத்யராஜ் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "வாரிசு அரசியல்" என்ற விமர்சனத்தைத் தவிர்க்கவும், ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்து, தனிச் சின்னம் கேட்டார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.. இதனால் கமல்ஹாசன் மட்டுமின்றி அவரது கட்சியினர் யாருமே போட்டியிடவில்லை.. தேர்தலையே கமல்ஹாசன் புறக்கணித்துவிட்டார்
கனிமொழி
தூத்துக்குடி தொகுதி எம்பியாக இருக்கும் கனிமொழி அவர்களை மாநில அரசியலுக்கு அழைத்து வருவதில் தலைமைக்குச் சில தயக்கங்கள் இருக்கலாம். டெல்லியில் திமுக-வின் குரலாக அவர் நீடிப்பதே அவசியம் எனக் கருதப்பட்டிருக்கலாம். சென்னை மேயர் பிரியாவைப் பொறுத்தவரை, மேயர் பதவிக்காலம் முடியும் வரை அவரை மாற்ற வேண்டாம் என தலைமை முடிவெடுத்திருக்கலாம்.
வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, போஸ் வெங்கட்,
ஊடகங்களில் திமுக-விற்காகக் கடுமையாகப் வாதாடும் ராஜீவ் காந்தி மற்றும் போஸ் வெங்கட் போன்றோருக்கு சீட் கிடைக்கும் எனப் பலரும் நம்பினர். அதேபோல் தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த வைஷ்ணவிக்கும் சீட் வழங்கப்படவில்லை. ஆனால், கட்சி நிர்வாகத்தில் அடிமட்டத்திலிருந்து உழைத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மாவட்டச் செயலாளர்களின் அழுத்தம் இவர்களை ஓரங்கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
'தமிழன் பிரசன்னா 'ஸ்பெஷல்' வாய்ப்பு
எழும்பூர் தொகுதியில் தமிழன் பிரசன்னாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது தற்செயலானது அல்ல. அதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளதாம். கடந்த சில ஆண்டுகளாகச் சமூக வலைதளங்களிலும், நேரடி விவாதங்களிலும் திமுகவின் கொள்கைகளை ஆணித்தரமாகப் பதிவு செய்தவர். குறிப்பாக 'உதயநிதி ஸ்டாலின்' மீதான விமர்சனங்களுக்கு முன்நின்று பதில் கொடுத்தவர் என்பதால் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்
தலித் அரசியல் பலம்
ழும்பூர் ஒரு தனித்தொகுதி . அங்குப் படித்த, ஆளுமைமிக்க ஒரு தலித் இளைஞரை நிறுத்த வேண்டும் என திமுக தலைமை விரும்பியது. விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைக் கவர்வதற்கும் இவரது ஆளுமை உதவும் எனக் கணிக்கப்பட்ட்டிருக்கிறது. அதேநேரம் பரந்தாமன் எம்எல்ஏவிற்கு ஏன் சீட் மறுக்கப்பட்டது என்பது குறித்தும் சவுக்கு சங்கர் உள்ளிட்ட சிலர் தகல்களை கூறி வருகிறார்கள். அதன்படி பரந்தாமனுக்கும் முக்கியமான சென்னை அமைச்சருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் அவருக்குச் சீட் கிடைக்காமல் போனதற்கு ஒரு பின்னணியாக கூறுகிறார் சவுக்கு சங்கர். ஆனால் அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இந்த 164 வேட்பாளர் பட்டியலில் திமுக தலைமை மிகவும் கவனமாகச் செயல்பட்டுள்ளது. சிட்டிங் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட அதே நேரத்தில், ஊடகங்களில் பிரபலமான முகங்களையும் விடக் கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதேபோல் அதிமுகவில் இருந்து வந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் சீட் கிடைத்துள்ளது. எனினும் சீட் கிடைக்காத திவ்யா சத்யராஜ்., கனிமொழி, மேயர் பிரியா, போஸ்வெங்கட், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி ஆகியோரை கிண்டல் செய்து எதிர்க்கட்சிகள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றன.
-
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?














Click it and Unblock the Notifications