• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கைமீற கூடாது".. பிடிஆர் காரில் செருப்பு வீச்சு! நிதானமாக "டீல்" செய்த திமுக! காரணமே வேறயாம்

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளும் திமுக அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நிதானமாக கையாண்டது. சட்டத்தை கையில் எடுக்காமல் சட்டப்படி இந்த விவகாரத்தை ஆளும் திமுக அரசு கையாண்டது.

திமுகவினர் சிலரே கூட.. ஒரு காலத்தில் எப்படி இருந்த திமுக. நிர்வாகிகள் மீது கை வைக்கவே பயப்படுவார்கள். ஆனால் இப்போது அமைச்சர் கார் மீது செருப்பு வீசுகிறார்கள்.

ஆனால் நாம் அமைதியாக இருக்கிறோம் என்று திமுகவினர் சிலரும் கூட கமெண்ட் அடித்து இருந்தனர். ஆனால் ஆளும் திமுக அரசோ வேறு சில காரணங்களுக்காக இந்த விவகாரத்தில் அமைதியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

கோட்டை வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும், அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் தெரிந்தே இந்த விவகாரத்தில் ஆளும் திமுக "அத்துமீறி" செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

7 வருவாய் கிராமங்கள்! 813 குடும்பங்கள்! தலா ரூ.4800 நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்! 7 வருவாய் கிராமங்கள்! 813 குடும்பங்கள்! தலா ரூ.4800 நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த விவகாரம் நடந்ததும்.. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பிடிஆருக்கு ஆதரவாக பேசினார்கள். இன்னொரு பக்கம் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இந்த சம்பவத்தை கண்டித்து பேசினார். முதல்வர் ஸ்டாலின் மட்டும் கருத்து தெரிவிக்காமல் இதில் அமைதி காத்தார். சரியாக ஒரு நாளுக்கு பின்பாக இந்த விவகாரத்தில் பாஜகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மற்றபடி இந்த விவகாரத்தில் சட்டப்படி மட்டுமே ஆளும் திமுக நடந்து கொண்டது.

சட்டப்படி

சட்டப்படி

அதாவது தவறு செய்த 6 பேரை கைது செய்தது. இவர்களை கோர்ட் முன் ஆஜர் செய்து ரிமாண்ட் செய்தது. மதுரையில் சிறு சிறு போராட்டங்கள் செய்யப்பட்டன. ஆனாலும் எங்கும் கலவரம் வெடிக்காமல் பார்த்துக்கொண்டது. இந்த விவகாரம் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறாமல் பார்த்துக்கொண்டது. ஆளும் திமுஜே அரசு இந்த விவகாரத்தை இப்படி சட்ட ரீதியாக எதிர்கொள்ள இரண்டு காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

காரணம் 1

காரணம் 1

இந்த விவகாரத்தில் ஆளும் திமுக தொண்டர்கள் போராட்டம் செய்யப்போனால்.. எல்லாமே மாறிவிடும். கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. அமைச்சர் காரில் செருப்பு வீசியவர்கள் அந்த நோக்கத்தோடுதான் செருப்பு வீசினார்கள். கலவரம் நடந்தால்.. எல்லா தப்பும் அமைச்சர் மீதுதான் என்பதை போல மாற்றிவிடுவார்கள். அமைச்சர் பிடிஆர் தான் கலவரத்தை தூண்டியதாக மாற்றிவிடுவார்கள். அதை அனுமதிக்க கூடாது. சட்டப்படியே நடப்போம் என்று ஆளும் திமுக இதில் நிதானமாக செயல்பட்டுள்ளது.

கலவரம்

கலவரம்

அதாவது கலவரம் மூலம் பாஜக பல மாநிலங்களில் வளர்ந்து உள்ளது. அப்படி நடக்க கூடாது. அதோடு நாம் ரியாக்ட் செய்யாமல் இருந்தாலே போதும். பாஜகதான் தவறு செய்தது என்று மக்களுக்கு தெரிந்துவிடும். நாம் ரியாக்ட் செய்தால் அது வேறு மாதிரி மாறிவிடும் என்று அடக்கி வாசித்து உள்ளது திமுக. இந்த விவகாரத்திற்கு பின் இன்னொரு காரணமும் இருக்கிறதாம். ஆட்சி நம்முடைய கையில்தான் இருக்கிறது. பாஜக தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

Recommended Video

  Nirmala Sitharaman Car-ல திமுககாரங்க கல் வீசுனாங்க-Annamalai *Politics | Oneindia Tamil
  சட்டம்

  சட்டம்

  கலவரம் செய்ய நாம் எதிர்க்கட்சி அல்ல. அதனால் போலீஸ் நடவடிக்கை பாயும் என்பதை "அவர்கள்" உணரட்டும். இப்போ பாருங்க அதிமுக உட்பட எல்லா கட்சிகளும் பாஜகவை விமர்சனம் செய்கிறது. பாஜகவை தனித்து விட இதுவே நல்ல சூழல். தேவையின்றி நாம் ரியாக்ட் செய்து. பின்னர் திமுகவை ரவுடி கட்சி என்று தவறாக பிரச்சாரம் செய்துவிட கூடாது என்று ஆளும் திமுக நினைத்தாக கூறப்படுகிறது. உளவுத்துறை ரிப்போர்ட், அறிவுரை அனைத்தையும் பின்பற்றித்தான் இந்த முடிவை ஆளும் திமுக எடுத்ததாக கூறப்படுகிறது.

  English summary
  Why did DMK handle PTR Palanivel Thiagarajan issue softly? What is the real reason?மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளும் திமுக அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நிதானமாக கையாண்டது. சட்டத்தை கையில் எடுக்காமல் சட்டப்படி இந்த விவகாரத்தை ஆளும் திமுக அரசு கையாண்டது.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X