என்னங்க இது? சட்டென அப்பாவு அறைக்கே போன பன்னீர்?.. ஒரே ஒரு கேள்வி.. அப்பறம் நடந்ததுதான் "சம்பவம்"
சென்னை: தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற முக்கிய அதிகாரியின் நியமனம் ஒன்று அரசியல் வட்டாரத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசியல் மாண்பிற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடக்க போவதாக கடந்த 14ம் தேதி ஒன் இந்தியா தமிழ் சார்பாக செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம். மொத்தம் ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். அதிகாரிகள் 30 பேர் வரை மாற்றுவதற்கான பட்டியலை ரெடி செய்து வருகிறார் முதல்வர்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வரும்.. இது மட்டுமின்றி மற்ற செயலாளர்கள் பலரும் அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட உள்ளனர் என்றும் குறிப்பிட்டு இருந்தோம்.

அதிகாரிகள் நியமனம்
பொதுவாக அதிகாரிகள் மாற்றத்தில் அமைச்சர்கள் தொடங்கி திமுக மா.செ.க்கள் வரை யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். முதல்வர் ஸ்டாலினே நிர்வாக ரீதியாக ஆலோசனைகளை செய்து, மாற்றங்களை மேற்கொள்வார். அமைச்சர்களிடம் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மே மாதத்திற்கு முன்பு வரை பெரிதாக ஆலோசனைகளை கேட்டது இல்லை. ஆனால் இந்த முறை அமைச்சர்களிடம் ஆலோசனை செய்து, நிர்வாகிகளை மாற்றம் செய்ய போவதாக கூறப்பட்டது.

ஐஏஎஸ்
அதாவது, 20-க்கும் மேற்பட்ட துறைகளில் அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. அமைச்சர்களுக்கு தெரியாமலே பல விசயங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இது ஒரு கட்டத்தில் அமைச்சர்களுக்கு தெரியவரும் போது அவர்களுக்கு கோபம் வருகிறது. இப்படி பல துறைகளில் பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த நிலையில்தான் அமைச்சர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு அதிகாரிகள் மாற்றம் நடக்க போவதாக கூறப்படுகிறது.

இடமாற்றம்
இந்த நிலையில்தான் சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் கூடுதல் செயலாளர் அந்தஸ்துக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை செயலக நிர்வாகிகள், அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனைக்கு பின்பே இந்த நியமனம் நடந்து இருக்கிறதாம். இந்த நிலையில்தான்... இதில் சபாநாயகர் அப்பாவுவின் பரிந்துரைபடி இணை செயலாளராக இருந்த நாகராஜ் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள் தலைமை செயலக வட்டாரத்தினர்.

ஓபிஎஸ்
விசாரித்ததில்.. நாகராஜ் முன்பே முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் இவர் துணை முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். அவரிடம் நேரடி உதவியாளராக இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் இந்த ஆட்சியில் ஓரம்கட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் வேறு சில நிர்வாக ரீதியான விஷயங்களை பேசுவதற்காக ஓபிஎஸ் சமீபத்தில் சபாநாயகர் அப்பாவு அறைக்கு சென்றுள்ளார்.

அப்பாவு சூப்பர்
அப்போது தொகுதி தொடர்பாக சில விஷயங்களை பேசியவர்.. நாகராஜ் குறித்தும் பேசி இருக்கிறார். எனக்கு உதவியா இருந்தார்.. நன்றாக வேலை செய்வார். அவரை ஓரம்கட்டுகிறார்களா? என்னங்க இது? என்று தன்மையாக கேட்டு இருக்கிறார். உடனே அப்பாவு இதை பற்றி பார்க்கிறேன் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பே நாகராஜின் conduct சரியாக இருப்பதை உறுதி செய்து, அவருக்கு இணை செயலாளர் பொறுப்பில் இருந்து கூடுதல் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள். எதிர்க்கட்சி உறுப்பினர் சொல்கிறார் என்று ஓரம்கட்டாமல்.. அப்பாவு உரிய நியமனத்தை மேற்கொண்டது வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசியல் மாண்பிற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications