சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

28 முறை லெட்டர்! மத்திய அரசு தந்த பிரஷர்! மின்கட்டண உயர்விற்கு என்ன காரணம்? செந்தில் பாலாஜி விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது, வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம், மற்ற மாநிலங்களை விட குறைவாகவே மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    Senthil Balaji விளக்கம் | Electricity Bill Hike In Tamilnadu | *TamilNadu

    தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டுள்ளது.

    அந்த 6 பேர்.. அதில் 1 இப்பவே காலி.. பதவி பறிப்பு எப்போது? ரெண்டு விரலை காட்டும் எடப்பாடி பழனிசாமி! அந்த 6 பேர்.. அதில் 1 இப்பவே காலி.. பதவி பறிப்பு எப்போது? ரெண்டு விரலை காட்டும் எடப்பாடி பழனிசாமி!

    400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்பட்டுள்ளது. 600 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.155உயர்த்தப்பட்டுள்ளது.

    மின் கட்டணம்

    மின் கட்டணம்

    இந்த நிலையில் மத்திய அரசு கொடுத்த அழுத்தம்தான், மின்கட்டண உயர்விற்கு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. எரிசக்தி துறை அமைச்சகம் சார்பாக இந்த அழுத்தம் தரப்பட்டது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் அரசு மானியத்தை நிறுத்துவோம்.

    மின் துறை திட்டம்

    மின் துறை திட்டம்

    நீங்கள் நிறுத்தவில்லை என்றால் மத்திய மின் துறை திட்டத்தை நாங்கள் உங்கள் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் 1 வருடமாக மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தார். 1 வருடமாக அவர் மின் கட்டணத்தை மாற்றாமல் இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த மின்சாரத்துறை கூட்டத்தில் மத்திய அரசு எங்களிடம் அழுத்தம் கொடுத்தது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கண்டிப்பாக மானியம் தர மாட்டோம் என்றார்.

    டெல்லி ஆலோசனை

    டெல்லி ஆலோசனை

    நான் இதன்பின் டெல்லி சென்று பேசிய போதும் எங்களிடம் கறாராக பேசினார்கள். மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்கள். 28 முறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. தனியார் மின் நிறுவனங்களுக்கும் இதற்காக கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.

    மின் கட்டணம் உயர்வு

    மின் கட்டணம் உயர்வு

    அதாவது மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றவில்லை என்றால், தமிழ்நாடு அரசுக்கு நீங்கள் மின்சாரம் கொடுக்க கூடாது என்று மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்துவிட்டது. அந்த அளவிற்கு அவர்கள் பிரஷர் கொடுத்ததே மின்சார உயர்விற்கு காரணம். வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். மற்ற மாநிலங்களை விட குறைவாகவே மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

     மொத்தம் எத்தனை இணைப்பு

    மொத்தம் எத்தனை இணைப்பு

    மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் 1 கோடி மக்களுக்கு எந்த பாதிப்பும் இதனால் இருக்காது. 42 விழுக்காடு மின் இணைப்புதாரர்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று செந்தில் பாலாஜி தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    Why did the Electricity tariff hike in Tamil Nadu? Union Govt is the reason says Senthil Balaji.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X