சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அங்கே உட்காரணும்பா! அருகே சென்ற "திருமா" தாயார்.. சட்டென ஸ்டாலின் தந்த "ரியாக்சன்".. நெகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழாவில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Stalin தேசிய தலைவராக வேண்டிய நேரம் வந்துவிட்டது - Thol. Thirumavalavan *Politics

    விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    விசிக - திமுக உறவு, திமுக கூட்டணி, திருமா திருமணம் செய்து கொள்ளாதது என்று பல விஷயங்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

    இந்த நிகழ்வின் போது சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. அதன்படி மேடையில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து இருந்தார்.

    திருமாவளவன் மணி விழா! நாகூரிலிருந்து வந்த ஸ்பெஷல் பால்கோவா! தாய்மண் அலுவலகத்தில் சிறப்பு துஆ! திருமாவளவன் மணி விழா! நாகூரிலிருந்து வந்த ஸ்பெஷல் பால்கோவா! தாய்மண் அலுவலகத்தில் சிறப்பு துஆ!

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    அவருக்கு அருகில் திருமாவளவன் அமர்ந்து இருந்தார். அதற்கு அடுத்தபடியாக திருமாவளவனின் தாயார் பெரியம்மாள் அமர்ந்து இருந்தார். திருமாவும் - ஸ்டாலினும் மேடையிலேயே சில நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். இதை திருமாவளவனின் தாயார் பெரியம்மாள் பார்த்து கொண்டே இருந்தார். இவர்களை ரசித்தபடி இருந்தார். அதன்பின் திருமாவின் காதுகளில் பெரியம்மாள் எதோ கிசுகிசுத்தார். பின்னர் கையை காட்டி நான் அங்கே உட்காரணும்பா என்பது போல பேசினார்.

    சந்திப்பு

    சந்திப்பு

    இதையடுத்து உடனே திருமா முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு இடம் மாறி அமர்ந்தார். பெரியம்மாள் முதல்வர் ஸ்டாலின் அருகே சென்று அமர்ந்தார். இது மேடையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெரியம்மாள் தனக்கு அருகே அமர்ந்ததும் ஸ்டாலின் சிரித்தபடி அவரிடம் பேசினார். திருமா அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு.. எப்படி இருக்கீங்க என்று விசாரித்தார். அவரும் பதிலுக்கு முதல்வர் ஸ்டாலினை மிகவும் பாசமாக விசாரித்தார்.

    விசாரித்தார்

    விசாரித்தார்

    மேடையில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில்தான் சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் திருமாவளவனின் தாயார் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இது தொடர்பாக ட்விட் செய்திருந்த திருமா, எண்பதை நெருங்கும் வயது. திடீரென அம்மாவுக்கு நெஞ்சுவலி. ஓரிரு நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது. அம்மாவை அவசரமாக திருச்சிக்கு அழைத்துச் சென்றபோதுதான் தகவலறிந்து சென்னைக்கு அழைத்து வர செய்தேன்.

    உடல்நிலை

    உடல்நிலை

    ஜூன் 22 மாலை நடந்த ஆஞ்சியோ சோதனையில்தான் அவருக்கிருந்த ஆபத்து தெரியவந்தது. இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்து ஓரிடத்தில் மட்டும் அடைப்பு நீக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டம் அமைவதற்கு ஏதுவாக 'ஸ்டென்ட்' எனும் ஒன்றைப் பொருத்தியுள்ளனர். இது அறுவை சிகிச்சை அல்ல. ஆனாலும் இது ஒரு சவாலான மருத்துவப் பணி. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது, என்று குறிப்பிட்டுட்டார் .

    திருமாவளவன்

    திருமாவளவன்

    இதையடுத்து அதே நாள் திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் போன் செய்து பேசினார், அதில், அம்மா எப்படி இருக்காங்க.. எதுவும் உதவி வேண்டுமா என்று கேட்டுள்ளார். சுமார் 5 நிமிடங்கள் இவர்கள் பேசி உள்ளனர். முதல்வரின் விசாரிப்பை கேட்டு போனிலேயே திருமா நெகிழ்ச்சி அடைந்துள்ளார். உங்களின் அன்பான விசாரிப்பிற்கு நன்றி என்று போனிலேயே முதல்வருக்கு திருமா நன்றியும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Why did VCK MP Thriumavalavan mother sit next to CM Stalin in yesterday function? விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழாவில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X