காலி பண்ண சொல்லுவாங்க! எடப்பாடிக்கு பறந்த எச்சரிக்கை! உடனே இடத்தை மாற்றி அதிரடி.. அப்போ "செவ்வந்தி"?
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக செய்து வருகிறது. இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும்? எதிர்க்கட்சி துணை தலைவர் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் கடந்த வாரம் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் அதிமுக பொதுக்குழுவே செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதோடு இதற்கு எதிராக அவர் தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்துள்ளார்.

மீட்டிங்
இது போக ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில் அவரின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி என்ன ஆகும் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஓ பன்னீர்செல்வம் ஏற்கனவே சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக செய்து வருகிறது.

கூட்டம்
இன்று நடக்கும் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக அதிமுக கூட்டங்கள் அதிமுக அலுவலகத்தில்தான் நடக்கும். ஆனால் கடந்த வாரம் பொதுக்குழு அன்று அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பொதுக்குழு அன்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகளுக்கும், எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளுக்கும் இடையில் மோதல் வந்தது. இந்த மோதல் அன்று கலவரமாக வெடித்தது. இதை தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

சீல்
இதன் காரணமாக தனது கிரீன்வேஸ் இல்லத்தைதான் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மீட்டிங்கிற்காக பயன்படுத்தி வருகிறார். அங்கு இருக்கும் செவ்வந்தி இல்லம் - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசித்த இல்லம் ஆகும். தற்போது அவர் அங்கேயே தொடர்கிறார். இங்குதான் இன்று நடக்க இருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு சட்டப்படி அனுமதி கிடையாது. தமிழ்நாடு சம்பளம் வழங்கும் சட்டம், 1951ன் கீழ் இந்த கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் பிளான்
அதனால் இங்கு கட்சி சார்ந்த கூட்டம் நடத்த கூடாது. அப்படி கூட்டம் நடத்தினால் அது சிக்கல் ஆகும். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் கோவை செல்வராஜ் தலைமையில் தலைமை செயலாளர் இறையன்புவிடம் இது தொடர்பாக புகார் வைத்தனர். அரசு வீட்டை கட்சி அலுவலகமாக பயன்படுத்துகிறார் என்று புகார் வைத்தனர். இதனால் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினர்.
Recommended Video

எடப்பாடி ஆலோசனை
அதோடு எடப்பாடி பழனிசாமிக்கு அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரும் இதே ஆலோசனையை வழங்கி உள்ளனர். வீட்டில் கூட்டம் நடத்துவது சரியாக இருக்காது.. அப்படி நடந்தால் வீட்டை காலி பண்ண சொல்லுவார்கள் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர். இதையடுத்து வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அதிமுக கூட்டம் சென்னை அடையாறு கிரவுன் பிளாசாவிற்கு மாற்றப்பட்டது. வீட்டில் கூட்டம் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு கிரவுன் பிளாசாவிற்கு கூட்டம் மாற்றப்பட்டுள்ளது.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications