எல்லாரும் ரெடியா இருங்க.. திடீரென "ஆர்டர்" போட்ட ஓபிஎஸ்.. பறந்த "கால்".. மொத்தமாக மாறும் காட்சிகள்!
சென்னை: அதிமுக பொதுக்குழு நாளை நடக்க உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இதற்கு தீவிரமாக தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிஎஸ்கே - மும்பை போட்டிகளில் 15 ஓவர் வரை எதுவும் செய்யாமல் சிஎஸ்கே அணி கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்டும். அதிலும் கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்று ஆட்டத்தை திக் திக் என்று முடிக்கும்.
அப்படி சிஎஸ்கே போட்டிக்கு இணையான திரில்லிங்கோடு சென்று கொண்டு இருக்கிறது அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு நடப்பது என்னவோ நாளை காலை 9.15 மணிக்கு. அழைப்பிதழில் 9.15 மணிக்குதான் பொதுக்குழு முறையாக கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பொதுக்குழு நடக்கலாமா வேண்டாமா என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்க போவதே 9 மணிக்குத்தான். ஆம் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாளை காலை 9 மணிக்குதான் தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

ஓ பன்னீர்செல்வம்
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதங்களின் படி, பொதுக்குழு என்பதே சட்ட விரோதமாக கூடுகிறது. சட்டப்படி பொதுக்குழுவை கூட்ட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பொதுக்குழு ஒருங்கிணைப்பாளரின் அனுமதி இன்றி சட்டத்தை மீறி கூட்டப்படுகிறது. அதனால் இந்த பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைத்துள்ளது. இதில்தான் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தீர்ப்பு
இப்போது வரை பொதுக்குழுவிற்கு செல்லும் திட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இல்லை. ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவை கூட்டவில்லை என்பதால், இது அதிகாரபூர்வமற்ற பொதுக்குழு. இதற்கு செல்ல மாட்டேன் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் நாளை பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கினால், பெரும்பாலும் பொதுக்குழுவிற்கு செல்லும் முடிவை ஓபிஎஸ் எடுப்பார் என்கிறார்கள். அதாவது உயர் நீதிமன்றம்.. நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறும் பட்சத்தில் பொதுக்குழுவிற்கு செல்லும் முடிவை ஓபிஎஸ் எடுப்பார் என்கிறார்கள்.

தொண்டர்கள்
இல்லையென்றால் தனது ஆதரவு நிர்வாகிகளை மட்டுமாவது ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு போக செய்வார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தரப்பு செய்து வருகிறதாம். சுமார் 1000 பேரை ஓ பன்னீர்செல்வம் இதற்காக சென்னைக்கு இன்று வரவழைக்க இருக்கிறாராம். தேனியில் இருந்து பேருந்து மூலம் இவர்கள் சென்னைக்கு வர உள்ளனர். சிலர் லாரிகளில் சென்னைக்கு வர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஏற்பாடுகள்
இதற்காக தேனி நிர்வாகிகளுக்கு போன் செய்து.. எல்லோரையும் வர ஏற்பாடு செய்யுங்கள் என்று ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இன்று மாலை சென்னைக்கு வரும் அவர்கள் இரவே ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க உள்ளனர். பொதுக்குழு ஒருவேளை கூடினால், அதில் நம்முடைய பவரை காட்ட வேண்டும். கடந்த முறை போல ஆகிவிட கூடாது. இந்த முறை காட்சிகள் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications