"11 மணிக்கு பேசுனதெல்லாம் வேஸ்ட்டா".. நேரம் பார்த்து நுழைந்த சசிகலா.. கலங்கிய ஜெயக்குமார்.. ட்விஸ்ட்
சென்னை: அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே அதிகார மோதல் தொடங்கிவிட்டது. மீண்டும் ஒற்றைத்தலைமை கோஷம் வேகம் எடுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் புழல் சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை சந்திக்க சசிகலா தீவிரமாக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பின் சில முக்கிய பிளான்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.. அது என்ன?
திமுக நிர்வாகி ஒருவரை அடித்து, அரைநிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டி சென்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஜாமீன் வழக்கு
இது தொடர்பான ஜாமீன் வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இப்போது ஜாமீன் வழங்க வேண்டிய அவசரம் கிடையாது. இப்போதுதான் கைது செய்யப்பட்டு இருக்கிறீர்கள். இன்னும் வழக்கில் விசாரணை முடியவில்லை என்று குறிப்பிட்டு ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி. இதையடுத்து தற்போது இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மேல்முறையீடு செய்துள்ளார். இவர் மீது கொலை வழக்கு போடப்பட்டு இருப்பதால் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சந்திக்கவில்லை
இவர் கைதான அன்று அதிமுக மூத்த தலைவர்கள் யாரும் இவரை சந்திக்கவில்லை. எல்லோரும் தேர்தல் ரிசல்ட்டில் பிஸி. இது பெரிய அளவில் சர்ச்சையானது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர், கடந்த ஆட்சியில் முக்கியமான அமைச்சராக கருதப்பட்டவர், சென்னையில் அதிமுக தரப்பில் இப்போதும் முக்கியமான தலைவராக இருக்க கூடியவர் ஜெயக்குமார்.. அப்படிப்பட்ட ஒருவர் இப்படி திடீரென கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் இவரை அதிமுக நிர்வாகிகள் யாரும் நேரில் சந்திக்காதது பெரிய சர்ச்சையானது.

கோபம்
இதனால் ஜெயக்குமார் தரப்பு ஜெயிலில் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது. நான் கட்சிக்காக அவ்வளவு செய்து இருக்கிறேன். தினமும் 11 மணிக்கு பிரஸ் மீட் வைத்து பேசி இருக்கிறேன். கட்சிக்கு வந்த அவப்பெயர்களுக்கு எல்லாம் பதில் தந்து இருக்கிறேன். ஆனால் இப்போ என்னை பார்க்க கூட தலைவர்கள் வரவில்லை. என்னை கைவிட்டுவிட்டனர் என்று வருத்தப்பட்டு தன்னை பார்க்க வந்த குடும்பத்தினரிடமும், கட்சியினரிடமும் ஜெயக்குமார் புலம்பியதாக கூறப்படுகிறது.

எடப்பாடி சந்திப்பு
இது அதிமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமாரை சந்தித்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஜெயக்குமாரை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த வாரம் நேரில் சந்தித்து பேசினார். எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் இதில் உடன் இருந்தனர்.

ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு
இந்த சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லை. அவர் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி மட்டும் வேலுமணியோடு சென்று ஜெயக்குமாரை சந்தித்தது பெரிய சர்ச்சையானது. இதையடுத்து நேற்று ஓ பன்னீர்செல்வமும் ஜெயக்குமாரை நேரில் சென்று சந்தித்தார். ஓ பன்னீர்செல்வம், கே பி முனுசாமி ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஜெயக்குமாருக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதிகார மோதல்
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் தரப்பிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஜெயக்குமாரை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஜெயக்குமாரை சந்திக்க போகிறோம் என்று சொல்லாமலே எடப்பாடி பழனிசாமி புழல் சிறைக்கு சென்று இருக்கிறார். இதனால் எடப்பாடி மீது கோபம் அடைந்த ஓ பன்னீர்செல்வம் நேற்று தனியாக சென்று ஜெயக்குமாரை சந்தித்து நடந்ததை பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார்.

வருத்தம்
இந்த நிலையில் ஜெயக்குமார் இதை பற்றியும் வருந்திக்கொண்டதாக தெரிகிறது. நமக்கு பெயில் கிடைக்கவில்லை. கட்சி இந்த நேரத்தில் ஒற்றுமையாக போராடாமல்.. அதிகார மோதலில் ஈடுபடுகிறார்கள். தலைவர்கள் எல்லாரும் ஒன்றாக வந்து பார்த்து இருந்தால் எனக்கும், தொண்டர்களுக்கும் நம்பிக்கையாக இருந்திருக்கும். வழக்கறிஞர் அணி கூட எனக்கு போதுமான உதவிகளை செய்யவில்லை என்று வருந்தி இருக்கிறாராம் ஜெயக்குமார்.

சசிகலா
இப்படி தலைமை இரண்டும் பிளவுபட்டு கிடைக்கும் நிலையில் ஜெயக்குமாரை சந்தித்து ஆதரவு திரட்ட சசிகலா முயன்று வருகிறாராம். சசிகலாவை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருபவர் ஜெயக்குமார். எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த ஜெயக்குமார் சசிகலா ஒவ்வொருமுறை அதிமுகவின் நுழைய முயன்ற போதும் முதல் ஆளாக பிரஸ் மீட் கூட்டி அதை பற்றி பேசி இருக்கிறார். சசிகலாவை எதிர்த்து ஒவ்வொருமுறையும் முதல் குரல் அதிமுகவில் இருந்து வருகிறது என்றால் அது ஜெயக்குமார் குரலாகத்தான் இருக்கும்.

வாய்ப்பு
ஆனால் இப்போது கைது நடவடிக்கை காரணமாகவும், தலைமை தன்னை சரியாக கண்டுகொள்ளவில்லை என்பதாலும் ஜெயக்குமார் விரக்தியில் இருக்கிறார். தேர்தல் தோல்வி பற்றிய செய்தியும் அவருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் சென்னையில் அதிமுகவின் படுதோல்வி பற்றியும் அவருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் 15 வார்டுகளில் மட்டுமே அதிமுக வென்றது குறிப்பிடத்தக்கது. இதை பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா சான்ஸ்
இந்த நிலையில்தான் தலைமையில் ஏற்பட்டுள்ள பிளவு, ஜெயக்குமாரின் அதிருப்தியை பயன்படுத்தி அவரின் ஆதரவை பெற சசிகலா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைமை உங்களுடன் இருக்காது. வலுவான தலைமை தேவை, நான் இருக்கிறேன் அதற்கு.. என்று சசிகலா தரப்பு இப்போதே ஜெயக்குமாருக்கு தகவல் அனுப்ப ஆரம்பித்துவிட்டதாம். ஏற்கனவே செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் சசிகலா வந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என்று கருதுகிறார். இப்போது ஜெயக்குமாரை ஆதரவையும் பெற்று விடலாம் முன்னாள் மீன்வள துறை அமைச்சருக்கு என்று சசிகலா தூண்டில் போட்டுகொண்டு இருக்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications