சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டென போனை எடுத்த ஓபிஎஸ்.. "அவருக்கே" கால் பண்ணிட்டாராமே.. உற்று பார்க்கும் டெல்லி.. மாறும் காட்சி?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான போன் செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவில் மிகப்பெரிய உட்கட்சி மோதலை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் பெரிதாக என்ன நடந்துவிட போகிறது காங்கிரஸ் - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே மோதல் நடக்க போகிறது. அதில் ஆளும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்ல போகிறது என்றுதான் அரசியல் நிபுணர்கள் பலர் கணித்தனர்.

ஆனால் கணிப்புகளை பொய்யாக்கி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்ற முடிவை எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.. கமலாலய வாசலில் காத்திருந்த அதிமுக தலைகள்? ட்ரெண்டாகும் #saveadmk கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.. கமலாலய வாசலில் காத்திருந்த அதிமுக தலைகள்? ட்ரெண்டாகும் #saveadmk

அதிமுக

அதிமுக

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன். மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது, என்று கூறி உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி

இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக தன்னுடைய வேட்பாளரும் களமிறங்குவார் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம். பாஜக போட்டியிடும் பட்சத்தில் தேசிய கட்சி என்பதற்காக அவர்களுக்கு எங்களின் ஆதரவை தெரிவிப்போம் என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

தன்னுடைய நிலைப்பாட்டை ஓ பன்னீர்செல்வம் பாஜக தலைவர்களை சந்தித்தும் விளக்கி உள்ளார். நேற்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் பேசினார். முதலில் கூட்டமாக ஆலோசனை செய்தவர்கள் அதன்பின் தனியாக 30 நிமிடம் ஆலோசனை செய்துள்ளனர். இந்த ஆலோசனையில், அதிமுக சார்பாக நானும் என்னுடைய வேட்பாளரை களமிறக்க உள்ளேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. எங்களுக்கு உங்களின் ஆதரவு வேண்டும். ஒருவேளை நீங்களே வேட்பாளரை களமிறக்குகிறீர்கள் என்றால் நாங்கள் விலகிக்கொள்கிறோம். பாஜக வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம் என்று கூறி உள்ளார் ஓ பன்னீர்செல்வம்.

அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலையும் இதை கேட்டுவிட்டு, பாஜக வேட்பாளரை நிறுத்துவதா இல்லையா என்பதை விரைவில் முடிவு செய்யும் நாசுக்காக குறிப்பிட்டு இருக்கிறாராம். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் இன்று குஜராத் சென்றுள்ளார். குஜராத்தில் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் செல்வதாக இருந்தாலும் அங்கே சில பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான பாஜக தலைவர் ஒருவருக்கும் போன் செய்து பேசி இருக்கிறாராம். தென்னிந்திய அரசியலில் கவனம் செலுத்தி வரும் மூத்த பாஜக நிர்வாகி ஆவார் அவர். ஈரோடு கிழக்கில் நிற்பதன் மூலம் எடப்பாடிக்கு எனது அணியின் முக்கியத்துவத்தை நான் உணர்த்த முடியும்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

நான் இன்றி அதிமுக தனியாக இயங்க முடியாது. நான் இன்றி எடப்பாடி இயங்க முடியாது என்பதை நிரூபிக்க முடியும். அதனால்தான் ஈரோடு கிழக்கில் போட்டியிட விரும்புகிறேன். மற்றபடி பாஜகவை எதிர்க்கும் எண்ணம் இல்லை. பாஜக இங்கே வேட்பாளரை நிறுத்தினால் நான் அந்த வேட்பாளரை ஆதரிப்பேன். நான் வேட்பாளரை நிறுத்த மாட்டேன், என்று குறிப்பிட்டு இருக்கிறாராம். டெல்லி பாஜக இதில் எடுக்க போகும் முடிவை வைத்த அதிமுக சின்னம் முடங்குமா, முடங்காத என்பது தெரிய வரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

English summary
Why is O Panneerselvam keeping himself close with BJP ahead of Erode East By-Election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X