சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஞாபகம் இருக்கா.. இப்போ "எங்கே.. எப்படி" இருக்காரு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை : தமிழ் திரை உலகில் ஸ்டண்ட் மாஸ்டராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்ததோடு அவ்வப்போது காமெடி காட்சிகளிலும் வந்து அசத்திய கனல் கண்ணன் திடீரென ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Recommended Video

    Kanalkannan Stunt master மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு! | Periyar Controversy *TamilNadu

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் பலரும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் அளவுக்கு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

    அப்படி என்னதான் பேசினார் கனல் கண்ணன் என பார்க்கும்போது சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணியின் பிரச்சார பொதுக்கூட்ட நிறைவு விழாவில் பேசிய அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முன்பு கடவுள் இல்லை என்று சொன்னவரை சிலை இருக்கிறது அந்த சிலையை உடைக்க வேண்டும் அந்த நாள்தான் ஹிந்துக்களின் எழுச்சி நாள் என பேசி இருக்கிறார்.

    ஸ்ரீரங்கம் கோவில் எதிரே 'கடவுள் இல்லைனு’ சொன்னவர் சிலை! அதை உடைக்கனும்! தனலை கிளப்பிய கனல் கண்ணன்..! ஸ்ரீரங்கம் கோவில் எதிரே 'கடவுள் இல்லைனு’ சொன்னவர் சிலை! அதை உடைக்கனும்! தனலை கிளப்பிய கனல் கண்ணன்..!

    கனல் கண்ணன்

    கனல் கண்ணன்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் முன்பு பெரியார் சிலை தான் இருக்கிறது பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கனல் கண்ணன் பேசியதாக அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. நீண்ட நாட்களாக ஊடக வெளிச்சத்தில் படாமல் இருந்த கனல் கண்ணன் திடீரென இவ்வளவு ஆவேசமாக பேசுவதற்கு என்ன காரணம் ஹிந்து முன்னணிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என விசாரித்த போது பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.

     சினிமா பிரவேசம்

    சினிமா பிரவேசம்

    ஆரம்ப காலத்தில் பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்த கனல் கண்ணன் அதன்பிறகு முதன் முறையாக தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சி இயக்குனராக களம் இறங்கினார்.பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் சினிமாவில் பிசியான ஸ்டண்ட் மாஸ்டர் அவ்வப்போது வரும் காமெடி நடிகர் என மட்டுமல்லாது இந்து முன்னணியின் மாநில பொறுப்பிலும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

     சண்டை பயிற்சி

    சண்டை பயிற்சி

    1991ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பிறகு ஊர் மரியாதை, அரண்மனை கிளி, சக்திவேல், நாட்டாமை, பசும்பொன் ,படையப்பா, பத்ரி, சிட்டிசன், ரோஜா கூட்டம், சுள்ளான், மன்மதன் ,வரலாறு, சிலம்பாட்டம், ராஜாதி ராஜா, ஆதவன், வேட்டைக்காரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்துள்ளார்.

     முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள்

    ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா சிம்பு தனுஷ் என நான்கு தலைமுறை நடிகர்களுடன் கைகோர்த்து வந்த இவர் பிரம்மாண்ட சண்டை காட்சிகள் மூலமும் நகைச்சுவை கலந்த ஆக்சன் காட்சிகள் மூலம் இயக்குனர்களின் சண்டை பயிற்சி மாஸ்டர் என பெயர் பெற்றார் 1991 ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆம் ஆண்டு வரை பல படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்த அவரது கடைசி படம் குருதி பூக்கள்.

     காமெடி நடிகர்

    காமெடி நடிகர்

    குறிப்பாக சண்டை பயிற்சி இயக்குனராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களை தோன்றியுள்ளார் கனல் கண்ணன். காமெடி கலந்த இவரது நடிப்புக்கும் உடல் மொழிக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. சிவாஜி, சிட்டிசன், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சண்டை பயிற்சி மாஸ்டராகவும் காமெடி நடிகராகவும் களமிறங்கிய இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் ஓரளவு உண்டு. இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார் கனல் கண்ணன்.

     இந்து முன்னணி

    இந்து முன்னணி

    பெரியார் குறித்து திடீரென அவர் பேசியதற்கு என்ன காரணம் என விசாரித்த போது தற்போது அல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே இந்து முன்னணி அமைப்பில் கனல் கண்ணன் இணைந்துள்ளார். சினிமாவில் பிசியான சண்டை பயிற்சி இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தபோதே இந்து முன்னணி நிறுவனத் தலைவராக இருந்த ராமகோபாலன் முன்னிலையில் இந்து முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் பின்பு அந்த அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்து முன்னணி நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டிய அவர் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றும் பேசியுள்ளார். இந்த நிலையில் தான் தற்போது சென்னையில் அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    As a stunt master in the world of Tamil cinema, Kanal Kannan, who is a stunt master and has trained in fighting for more than a hundred films, has appeared in comedy scenes from time to time and is suddenly involved in a huge controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X