இந்தியாவை கலங்க வைக்கும் "மின்னல்" தாக்குதல் மரணம்.. எந்த மாநிலங்களில் அதிகம்? எப்படி தப்பிப்பது?
சென்னை: இந்தியாவில் இடி மின்னல் தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இயற்கை பேரிடர்களால் நிகழும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை மின்னல் தாக்குவதால் ஏற்படுவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஜெய்ப்பூர் அருகே அமர் கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் கொல்லப்பட்ட 11 பேரும் அடங்குவர். இவர்கள் மின்னல் வெட்டியபோது செல்ஃபி எடுத்ததால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
"மாபெரும் மின்சார தீப்பொறி" என்று அழைக்கப்படுகிறது மின்னல். ஒரு மின்னல் 100 மில்லியனிலிருந்து 1 பில்லியன் வோல்ட் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது.

மின்னல் எவ்வாறு கொல்கிறது?
ஒரு மின்னல் தாக்குதல் 10,000 டிகிரி செல்சியஸ் முதல் 30,000 டிகிரி செல்சியஸ் வரை சுற்றியுள்ள காற்றை வெப்பமாக்கும். எளிமையாகச் சொன்னால், ஒரு மின்னல் தாக்குதல் பெரும் அழிவுகரமான திறனைக் கொண்டிருக்கும். பல வழிகளில் மின்னல் தாக்க முடியும் என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) கூறுகிறது. முதலாவது நேரடி ஸ்ட்ரைக். இது மிகவும் அரிதானது என்றாலும், இது மிகவும் ஆபத்தானது. "பெரும்பாலும், திறந்தவெளியில் இதுபோன்ற தாக்குதல் நிகழ்கின்றன, "என NWS கூறுகிறது. மின்னலால் உருவாகும் வெப்பம் தீக்காயங்களை ஏற்படுத்தும், ஆனால் அது உடலின் ஊடாக செல்லும் மின்சாரத்தின் அளவுதான் உயிரை பறிக்க காரணமாக மாறுகிறது.

மரத்திற்கு அடியில் ஒதுங்க கூடாது
பெரும்பாலும், மின்னல் தாக்குதலுக்கு பலியானவர்கள் மரங்களின் அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்தான். இது 'சைட் ஃபிளாஷ்' என்று அழைக்கப்படுகிறது. "பாதிக்கப்பட்டவருக்கு அருகில் ஒரு உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தாக்குதல் பரவுகிறது" என்று ஆய்வாளர்கள் கூறுகிறஆர்கள்.
மின்னலால் தாக்கப்பட்ட பொருளில் இருந்து, பாதிக்கப்பட்டவர் ஒரு அடி அல்லது இரண்டு அடிக்கு உள்ளே இருக்கும்போது சைட் ஃப்ளாஷ்கள் வழக்கமாக நிகழ்கின்றன. இந்தியாவின் முதல் வருடாந்திர மின்னல் அறிக்கை (2019-2020), மரத்தின் அடியில் நிற்பதுதான் மின்னல் தாக்குதலுக்கு முக்கிய காரணம் என்று கூறுகிறது. மின்னல் இறப்புகளில் 71 சதவீதமும், 25 சதவீதம் இறப்புகளும் மரத்தின் அடியில் ஒதுங்கும்போதுதான் ஏற்படுகிறது.

தரை மின்னோட்டம் தாக்குதல்
தரை மின்னோட்டம் மற்றொரு காரணமாக உள்ளது. "மின்னல் தாக்குதல் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ளவர்கள் நிலம் வழியாக மின்னோட்டம் பாய்வதால் பலியாகக்கூடும்" என்று NWS கூறுகிறது. நிலம் வழியான தாக்குதல் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கும் என்பதால், இது அதிக மின்னல் இறப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணமாகிறது" என்று NWS கூறுகிறது.
மின்னல் ஒரு மரத்தையோ அல்லது வேறு எந்த பொருளையோ தாக்கிய பிறகு, ஆற்றலின் பெரும்பகுதி தரை மேற்பரப்பிலும் வெளிப்புறத்திலும் பயணிக்கிறது. மிக நெருக்கமான இடத்தில் உள்ளவர்கள் உடலில் இந்த ஆற்றல் நுழைகிறது, உடலை விட்டு அது வெளியேறும் முன்பாக, இருதய மற்றும் நரம்பு மண்டலங்கள் வழியாக பயணிக்கிறது.

மின்னல் தாக்கங்கள் எவ்வளவு நிகழ்கின்றன?
இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட 2019-2020ம் ஆண்டுக்கான மின்னல் தாக்குதல் அறிக்கை, 2019 ஜூலை 25 முதல் 31 வரை அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நடந்ததாகவும் கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில் அதிகப்படியாக மின்னல் தாக்குதல்கள் நடந்தன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

எந்த மாநிலங்களில் அதிகம்
இந்தியாவில் 2019ம் ஆண்டில், மொத்தம் 2,876 மின்னல் இறப்புகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய ஆண்டில் 2,357 இறப்புகளாகும். பீகார் (400), மத்தியப் பிரதேசம் (400), ஜார்க்கண்ட் (334), உத்தரபிரதேசம் (321) ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும். இவை அனைத்துமே ஒரே மண்டலத்தைச் சேர்ந்த, அதாவது மத்திய இந்தியா மற்றும் மத்திய கிழக்கு இந்தியா மாநிலங்களாக இருப்பது கவனிக்கத்தக்கது. மின்னல் ஏற்படும் போது தங்குவதற்கு வெளியில் பாதுகாப்பான இடம் இல்லை, வீட்டுக்குள் தங்குவதே சிறந்த பாதுகாப்பு.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications