சீக்ரெட்களும், மவுனங்களும்.. சசிகலா எங்கே?.. எடப்பாடி டென்ஷனுக்கு என்ன காரணம்.. அதிமுகவில் குழப்பம்
கொடநாடு விவகாரம் குறித்து சசிகலா அமைதியாக இருக்க என்ன காரணம்
சென்னை: சசிகலாவை காணோமே எங்கே போனார்? ஆடியோ மேல் ஆடியோவாக வெளியிட்டு கொண்டிருந்தவர் திடீரென ஏன் மவுனமாகி உள்ளார்? என்ன காரணம்? என்பன போன்ற சந்தேகங்கள் மெல்ல எழ தொடங்கி உள்ளன.
சட்டசபை தேர்தல் முடியும் வரை சத்தமில்லாமல் இருந்த சசிகலா, திடீரென அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பினார்.. அவர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசியதாக ஆடியோக்கள் வெளியானது.
முதலில் தொண்டர்களிடம்தான் சசிகலா பேசுகிறார்என்று சொல்லப்பட்டது.. பிறகு ஆதரவாளர்களிடம் பேசுகிறார் என்றார்கள்.. பிறகு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடமே சசிகலா போனில் பேசியதாக கூறப்பட்டது.

பின்னணி என்ன?
இந்த அத்தனை ஆடியோக்களும் வெளியான பின்னணி என்ன? யார் வெளியிட்டார்கள்? எதற்காக வெளியிட்டார்கள்? எதற்கான காய் நகர்த்தல் இது என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை வெளிப்படையாக விடை கிடைக்கவில்லை.. அதேசமயம், சசிகலா எடுத்த இந்த மூவ், எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் கலக்கத்தை தந்தது என்பதை மறுக்க முடியாது.

வருகை
சசிகலாவை எதிர்த்து தீர்மானம் போட சொல்லியும் பல மாவட்டங்களில் அத்தகைய தீர்மானங்களே நிறைவேற்றப்படவில்லை.. அத்துடன் சசிகலாவை ஆதரித்து வெளியிட்ட தீர்மானங்களால் எடப்பாடி சற்று நிலைகுலைந்து போனார் என்பதை மறுப்பதற்கில்லை.. அதேசமயம், 30 வருடம் ஜெயலலிதாவிடம் லாபி செய்தவரான சசிகலாவின் வருகையை அவரால் ஒரேடியாக குறைத்துவிடவும் முடியவில்லை.. சற்று திண்டாட்டத்தில் எடப்பாடி திணறும்போதுதான், சசிகலா மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார் என்ற செய்திகள் கசிந்தன.

சுற்றுப்பயணம்
கொரோனா குறைந்ததும், ஆகஸ்ட் இறுதியில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும், கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக அவர்கள் வீட்டிற்கே சென்று சசிகலா சந்திக்க போவதாகவும் கூறப்பட்டன.. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் சமயத்தில் எடப்பாடிக்கு இது மேலும் கலக்கத்தை தந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான் கொடநாடு விவகாரம் தலைதூக்கவும், எடப்பாடி பழனிசாமி மொத்தமாக கலங்கி போய் விட்டார்.
Recommended Video

வீடியோ
ஆனால், ஆடியோ வெளியிட்டதுடன் வீடியோவும் வெளியிட போவதாக சசிகலா தரப்பில் கூறப்பட்ட நிலையில், அது என்னவாயிற்று என்று தெரியவில்லை.. ஆடியோவும் காணோம்.. வீடியோவும் வரவில்லை.. அதேபோல மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் என்றார்கள், தற்போது லாக்டவுன் முடிந்து, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விட்ட நிலையில், அந்த சுற்றுப்பயணமும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

மவுனம்
இந்த கொடநாடு விஷயத்திலாவது சசிகலா வாய் திறப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதற்கும் வாய் திறக்கவில்லை.. இந்த விவகாரத்தில், இன்னும் சசிகலா ஏன் மௌனம் காக்கிறார் என்று அவரது பக்கம் கேள்வி திரும்பியிருக்கிறது... காரணம், இந்த ரகசிய அறைகள், அவற்றில் வைக்கப்பட்டிருந்த டாக்குமென்ட் பற்றிய ரகசிய விவரங்களை நன்றாகத் தெரிந்தவர்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும்தான்... அந்த எஸ்டேட்டின் அறை கதவுகளுக்கு டிஜிட்டல் பாஸ்வேர்டு இருக்குமாம்.. அதுகூட இவர்கள் 2 பேருக்கு மட்டும்தான் தெரியும் என்கிறார்கள்.

கொள்ளை
ஜெ.மரணத்துக்குப் பிறகு, சசிகலா தரப்பினரின் நிர்வாகத்தில்தான் கொடநாடு செயல்பட்டுவந்தது.. கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது, சசிகலா ஜெயிலில் இருந்ததால், போலீஸ் தரப்பிலும் சசிகலாவிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.. வழக்கின் சாட்சியாகவும் அவரை சேர்க்கவுமில்லை.. எனினும், திமுக, காங்கிரஸ் கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்து உள்ளநிலையில், சசிகலா தனது பங்குக்கு ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வரை மவுனம் காக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

சசிகலா
அதேபோல, ஜெயலலிதா பிறந்த நாளன்று, நினைவிடத்துக்கு சசிகலா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் போகவில்லை.. ஆகஸ்ட் 18-ம் தேதியன்று சசிகலாவுக்கு பிறந்தநாள்... அன்றைய தினமாவது சமாதிக்கு போய் அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் போகவில்லை.. இத்தனைக்கும் மெரினாவுக்கு செல்ல இப்போது தடை எதுவும் இல்லை.. தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன..!

கொடநாடு
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி மீதான கோபம் சசிகலாவுக்கு இன்னமும் இருப்பதாக தெரிகிறது.. அதனால்தான், கொடநாடு சம்பவத்தில் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து கொண்டே இருக்கிறார் என்றும், மற்றொரு புறம் இது தொடர்பான சட்ட ஆலோசனையிலும் அவர் தீவிரமாகியிருக்கிறார் என்றும், சொல்கிறார்கள்.

திமுக
இன்னொரு தகவலும் கசிகிறது.. திமுக தலைமைக்கு தன்னுடைய ஆதரவாளர் ஒருவர் மூலம் தூது விட்டதாகவும், அதன் பின்னரே இந்த கொடநாடு விவகாரம் சூடுபிடித்ததாகவும் சொல்கிறார்கள்.. இப்படி எத்தனையோ உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவரும் சமயம், சசிகலா ஏன் அமைதி காக்கிறார்? எங்கே இருக்கிறார்? என்பதுதான் பெருத்த சந்தேக கேள்வியாக எழுந்துள்ளது.
-
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications