சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படின்னா ஒரு சீட்கூட இல்லையா.. கடைசியில் வைகோ இப்படி சொல்லிட்டாரே.. கவலையில் மதிமுக!

திமுகவுடன் மதிமுக மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வைகோ ஏன் அப்படி பேசினார் என்று தெரியவில்லை.. "எம்எல்ஏ, எம்பியாக வேண்டும் என்ற ஆசையை எல்லாம் விட்டுவிடுங்கள்... ஊரில் இருந்து கொடியேற்றக் கூடிய தொண்டர்கள் பதவியை எதிர்பார்க்கிறார்களா?" என்று தன் கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்..!

ஆரம்பத்தில் இருந்தே பிரசாந்த் கிஷோர் 200 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று தலைமையை வலியுறுத்தி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..

அதாவது, மதிமுக, விசிக போன்ற கட்சிகளையும்கூட உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவைக்க வேண்டும் என்பதுதான் அவரது உறுதியான கண்டிஷன். இதற்கு ஸ்டாலினும் சம்மதித்துவிட்டதாக கூறப்பட்டது.. ஆனால், இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த மதிமுகவும், விசிகவும் இரட்டை இலக்கத்தில் சீட் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

இணையுமா இணையுமா "தலைகள்".. 7ம் தேதி "இவர்" வருகிறார்.. ஒரு வாரம் விட்டு "அவர்" வருகிறார்.. செம அதிரடி..!

 உதயசூரியன்

உதயசூரியன்

இப்படிப்பட்ட சூழலில்தான், இக்கட்சிகளுக்கு வெறும் 2 சீட்தான் ஒதுக்கப்படும், அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக திமுகவில் இருந்து தகவல் போயுள்ளது.. இதனால், அதிர்ந்து போன வைகோவும், திருமாவும் ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.. ஆனால், முடியவில்லை..

கட்சி

கட்சி

எப்பவுமே திமுகவுடன் துணையாக இருந்து வரும்நிலையில், இப்படி 2 சீட் என்பதை எப்படி ஏற்பது? எங்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் பரந்து விரிந்து கிடக்கின்றதே என்று இரு கட்சி தலைவர்களும் புலம்பி கொண்டுள்ளனர். இதனால், இவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள்? திமுக கூட்டணியிலேயே இருப்பார்களா? வெளியே வந்துவிடுவார்களா? 2 சீட்டை வாங்கி கொண்டு உதயசூரியனில் நிற்பார்களா என்ற கேள்விகள் எழுந்தபடியே உள்ளன.

 2 சீட்

2 சீட்

இதுபோன்ற குழப்பமான சூழலில்தான் வைகோ, தன் கட்சி நிர்வாகிகளிடம் இப்படி சொல்லி உள்ளார்.. எம்எல்ஏ, எம்பியாக கனவு காணாதீர்கள் என்றால், மதிமுகவுக்கு சீட் எதுவும் இல்லை போல தெரிகிறது.. 2 சீட் தந்தாலும் அதுவும் உதயசூரியன் என்பதால், மதிமுகவுக்கான அடையாளம், மதிமுகவுக்கான அங்கீகாரத்தை இந்த முறை தேர்தலில் வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என்றும் தெரிகிறது. அதனால், தன்னுடைய நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் அல்லது திமுகவின் முடிவை ஏற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தவே இவ்வாறு வைகோ பேசினாரா என்ற சந்தேகமும் வருகிறது.

வைகோ

வைகோ

ஆனால், வைகோவுக்கு ஏன் திமுக தாராளமாக சீட் வழங்க தயங்குகிறது என்று ஒரு சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது, "வைகோ மதிமுக என்ற ஒரு கட்சியை அன்னைக்கு தொடங்கியதே ஸ்டாலினுக்கு கலைஞர் முக்கியத்துவம் தந்துவிட்டார் என்பதற்காகத்தான்.. ஸ்டாலின் வளர்ந்துவிடக்கூடாது என்பதே ஆரம்பத்தில் இவரது எண்ணமாக இருந்தது. அதுபோலவேதான், மக்கள் நலக்கூட்டணியை அமைக்க காரணமாக இருந்தவரும் வைகோதான்.. முதல்வர் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தானே மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டது?

கம்யூனிஸ்ட்

கம்யூனிஸ்ட்

இதே வைகோ மட்டும் அன்று திமுகவுடன் கை கோர்த்திருந்தால், இந்நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும்.. தன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி கொள்வதும், உரிய நேரத்தில் பக்க பலமாக இல்லாமல் போனதும்கூட திமுகவின் முடிவுக்கு காரணமாக இருக்கலாம்.. அதேசமயம், கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் உட்பட மற்ற கட்சிகள் எப்போதுமே விசுவாசத்துடன், தலைமைக்கு கட்டுப்பட்டே இருப்பதால் அந்த கட்சிகளுக்கு 3 சீட் கூட தர முன்வந்துள்ளது திமுக" என்கின்றனர்.

 ஆயத்தம்?

ஆயத்தம்?

ஆக, இப்போது வைகோ என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை.. ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், அவசரப்பட்டு எமோஷனல் ஆகி, ஏதாவது ஒரு முடிவை எடுத்து விடுவது வைகோவின் வழக்கம்.. இந்த முறை திமுகவுடன் இணைந்தே பயணிப்பாரா? 3வது அணி மறுபடியும் வைகோ தலைமையில் உருவாகுமா? என்று தெரியவில்லை. ஆனால் கட்டாயம் அவர் திமுக கூட்டணியில்தான் இருப்பார் என்றும் சொல்கிறார்கள். அதிக சீட்களை எதிர்பார்க்க வேண்டாம் என்று கட்சியினரை ஆயத்தப்படுத்தவே இப்படி வைகோ பேசியிருப்பார் என்று சொல்கிறார்கள்.

English summary
Will MDMK alliance with DMK or stand alone in TN Assembly election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X