Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கமலாலயமும் அறிவாலயமும்".. ஒரே நாள்.. ஒரே இடத்தில்.. "சம்பவம்" இருக்கு போலயே.. அவரும் வர்றாராமே..!

ஆளுநரும் முதல்வரும் ஊட்டியில் சந்தித்து கொள்ள வாய்ப்புள்ளதா தெரியவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக முக்கிய சம்பவங்கள் ஊட்டியில் அடுத்தடுத்து நடக்க போகிறது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

சமீப காலமாகவே, தமிழகத்தில் ஏராளமான பரபரப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.. எனினும், பாஜக தரப்பில் என்ன நடக்கிறது என்ற ஆர்வம் அதிகமாகவே எழுந்து வருவது இயல்பாகிவிட்டது.

பாஜக என்னதான் தங்களை எதிர்த்தாலும், திமுகவும் எதற்குமே இதுவரை சளைக்கவில்லை.. அதிலும் ஆளுநர் ரவி விஷயத்தில் திமுக காட்டிய அதிரடியை பார்த்து, பாஜக மேலிடம் சற்று அதிர்ந்துதான் போய்விட்டதாம்.

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

நீட் விவகாரத்தில் அழுத்தம் தந்தால் திமுக ஓரளவு அடிபணியும் என்று பாஜக கணக்கு போட்டு, ஆளுநர் ரவியை வைத்து பலவாறாக நெருக்கடியும் ஏற்படுத்தப்பட்டது.. ஆனால், விவகாரத்தை அப்படியே உல்டாவாக்கி, ஆளுநர் பக்கமே திருப்பிவிட்டது திமுக..மேலும், பெட்ரோல் டீசல் விலைஉயர்வை கூட்டி, மாநில அரசுகளுக்கு எக்கச்சக்க நெருக்கடியும் சூழ்ந்தது.. இந்த விஷயத்திலும், பிரதமரையே காட்டமாக ஸ்டாலின் கேள்வி எழுப்பியது, தேசிய அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது..

 டிஆர்.பாலு

டிஆர்.பாலு

கறுப்பு கொடி, தேநீர் விருந்து புறக்கணிப்பு, ஆளுநரை மாற்றக்கோரி மக்களவையில் டிஆர் பாலு மேற்கொண்ட அதிரடி தீர்மானம் என நாலாபக்கமும் வந்த எதிர்ப்பை கண்டு ஆளுநர் மாளிகையே சற்று அதிருப்திக்கும் உள்ளாகியதாக கூறப்பட்டது.. இப்படி புகைந்து கொண்டிருந்த நேரத்தில்தான் திடீரென ஒரு நிசப்தம், கவர்னர் மாளிகையில் ஏற்பட்டது.. இதற்கு காரணம், குடியரசு தலைவர் தேர்தல் வரப்போவதுதான்.. இந்த விஷயத்திலும் 2 கணக்கு உள்ளது..

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

50க்கும் குறைவான சதவீத ஆதரவு மட்டுமே பாஜகவுக்கு உள்ளது.. எனவே, 3வது பெரிய கட்சியான திமுகவின் தயவும் பாஜகவுக்கு தேவைப்படுகிறது.. மற்றொருபக்கம், துணை குடியரசு தலைவர் பதவிக்கும் முயற்சிப்பதால், இப்போதைக்கு திமுக மீதான காட்டத்தை குறைத்து கொண்டுள்ளார் ஆளுநர் ரவி என்று தகவல்கள் கூறின.. ஆக மொத்தம் ஆளுநர் தரப்பு இப்போதைக்கு திமுகவை சீண்டாமல் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஆளுநரும், முதல்வரும் ஒரே நாளில் ஒரே இடத்தில் சந்தித்து கொள்ளக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

2 வருடம் கழித்து ஊட்டியில், மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.. இதுதவிர ஊட்டி உதயமாகி 200 ஆண்டு தினமும் கொண்டாடப்பட உள்ளது... அரசு சார்பிலும், 200 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது.. இவைகளில் எல்லாம் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 19ந் தேதி மாலை ஊட்டி செல்கிறார்... 21ந் தேதி வரை விழாக்களில் பங்கேற்று உதவிகளை வழங்குகிறார். இதேபோன்று வருகிற 15ந் தேதி கவர்னர் ரவியும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வருகிறார்...

 துணை குடியரசு தலைவர்

துணை குடியரசு தலைவர்

வருகிற 24ந் தேதி வரை ஊட்டியில் தங்கும் கவர்னர் அன்றைய தினம் நடக்கும் மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.. அதாவது முதல்வரும் கவர்னரும் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வருகிறார்கள்.. அப்படியே வந்தாலும் ஒன்றாக சந்தித்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்கிறார்கள்.. இதனிடையே 15ந் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் ஊட்டிக்கு வருகிறார்.. இப்படி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்வர் என 3 பேருமே ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வரும் நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+