"ஹாட்ரிக்".. 3 மேட்டரை கையில் எடுத்த பாஜக.. 25 இடங்களாமே.. அதுவும் திமுகதான் முதல் குறியே!
தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்றாராம் அண்ணாமலை
சென்னை : வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக இப்போதே தயாராகி விட்டது.. அதற்காக அதிரடிகளையும் அண்ணாமலை கையில் எடுத்துவிட்டார்.. !
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவின் எழுச்சி தமிழக பாஜகவுக்கு, பெருத்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்து வருகிறது.
அதுமட்டுமல்ல, "எப்போதுமே தனித்து போட்டியிட்டால் தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்" என்w பிரதமர் மோடி அன்று அண்ணாமலையிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்ட நிலையில், அதே ரூட்டில் பாஜக தற்போது சென்று கொண்டிருக்கிறது.

டஃப் தரும் பாஜக
ஒருபக்கம் திமுகவுக்கு டஃப் தந்துகொண்டே, மறுபக்கம், மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்க தூண்டில் போடுவது என துரித நடவடிக்கையில் இறங்கிவிட்டது.. அதுமட்டுமல்ல, சமீபத்தில் அமித்ஷா சென்னைக்கு வந்துபோனதில் இருந்தே, எம்பி தேர்தலுக்கான அடித்தளம் அமைத்து விட்டுபோனதாக தெரிகிறது.. தமிழக பாஜக தலைவர்களிடம், நிலவரம் குறித்து நீண்ட நேரம் அமித்ஷா அப்போது ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. சமீபகாலமாக நடந்த அரசியல் மாற்றங்கள், பாஜக ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தெல்லாம் காதுகொடுத்தும் கேட்டுள்ளார்.

நம்பர் ஒன்
இறுதியாக அவர்களிடம் "பாஜவுக்கு திமுகதான் நம்பர் ஒன் எதிரி.. அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.. இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்.. என்ன செய்வீங்களோ தெரியாது, வரப்போகும் எம்பி தேர்தலில் தமிழகத்தில் குறைந்தது 5 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிவிட்டு போனதாககூட செய்திகள் பரபரத்தன..

ஹாட்ரிக் பிளான்கள்
அமித்ஷா வந்து போனபிறகு, 3 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளது தமிழக பாஜக.. ஒன்று மாற்று கட்சியில் இருந்து முக்கிய தலைகளை பாஜகவுக்கு கொண்டு வருவது, அடுத்து, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளையாவது வென்றெடுக்க வேண்டும், அடுத்து, பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே அந்த 3 ஹாட்ரிக் பிளான்களாம்..

தமிழக பாஜக
அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவை மத்திய பாஜக முடிவு செய்யும் என்று அண்ணாமலை சொல்லி வந்தாலும், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக உள்ளதாம்.. அதாவது, கூட்டணி இல்லாவிட்டாலும்கூட, அதை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்தி கொள்வதில் மும்முரம் காட்டி வருவதாக தெரிகிறது.

25 சீட்
இதன் முதல்கட்டமாகதான் மதுரை ஆலோசனை கட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார்.. அங்குள்ள நிர்வாகிகளிடம் நேற்றைய தினம் அவர் பேசும்போதுகூட, தமிழக்தில் மற்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திக்கிறார்கள், ஆனால், பாஜகவினர் மக்களோடு இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று கண்டிப்பு உத்தரவு போட்டாராம்.. மேலும், குறைந்தது 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதையே திரும்ப திரும்ப சொன்னாராம்..

5 தாமரைகள்
அதாவது, 5 இடங்களில் பாஜக வென்றாக வேண்டும் என்று அமித்ஷா கண்டிஷன் போட்டால், 25 இடங்களுக்கு குறி வைத்து காய் நகர்த்த வேண்டும் என்றும் அண்ணாமலை கறாராக நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டாராம்.. 25 இடங்களுக்கு குறி வைத்தால்தான், 5-ல் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றும் பலமாக நம்புகிறாராம்.. ஆக மொத்தம், மற்ற கட்சிகளைவிட முந்திக் கொண்டு களமிறங்கி விட்டது பாஜக.. திராவிட கட்சிகள் என்ன செய்ய போகின்றன.. தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications