சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டிரம்ப் கார்ட்".. இந்திய டீமில் "இவர்" மட்டும் வந்தா மொத்தமா மாறிடும்! மூத்த வீரரின் ஐடியா! சூப்பர்

Google Oneindia Tamil News

சென்னை: ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் ஆட போகும் வீரர்கள் யார் யார் என்று இன்று அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிய கோப்பை 2022 தொடரில் இந்திய அணி வெற்றிபெறும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் இந்த தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடுதான் தொடங்கியது.

ஆனால் அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அடுத்த சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதேபோல் இலங்கைக்கு எதிராக நடந்த அடுத்த போட்டியிலும் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதனால் பைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

 நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி..6 மாவட்டங்களில் 100% பேர் தேர்ச்சி நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி..6 மாவட்டங்களில் 100% பேர் தேர்ச்சி

 இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணி இந்த தொடரில் தோல்வி அடைய பல காரணங்கள் சொல்லப்பட்டன. டெத் ஓவர்களில் இந்திய அணி சரியாக பேட்டிங் செய்யவில்லை என்று கூறப்பட்டது. 200 ரன்கள் அடிக்க வேண்டிய போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் மட்டுமே அடித்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பவுலிங்கும் மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்திய அணி சரியாக பவுலிங் செய்யவில்லை.

 காரணம் என்ன?

காரணம் என்ன?

முக்கியமாக பவர் பிளேவில் இந்திய அணி சரியாக விக்கெட்டுகளை எடுக்கவில்லை. இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி மிடில் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட் எடுத்தது. அதேபோல் கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்தது. எனவே நல்ல பவுலிங் இருந்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கும் என்பது தெளிவாகி உள்ளது.

 மோசமான பவுலிங்

மோசமான பவுலிங்

ஆனால் இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங் ஆகிய 3 பேருமே அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. பும்ரா இல்லாததால் மற்ற வீரர்கள் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. இந்த நிலையில்தான் இன்று உலகக் கோப்பை டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த தொடர் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

 ஜடேஜா பும்ரா

ஜடேஜா பும்ரா

இதில் இந்திய அணியின் பவுலிங்கில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஜடேஜா காயம் காரணமாக ஆட மாட்டார். இதனால் அக்சர் பட்டேல் உள்ளே வர வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங் ஆட வாய்ப்பு குறைவு. இதனால் பெரும்பாலும் ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணிக்குள் வர வாய்ப்பு உள்ளது. ஸ்பின் பவுலர்களாக சாஹல், அஸ்வின் தொடர வாய்ப்பு உள்ளது.

 என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

அதே சமயம் இந்திய அணியில் உம்ரான் மாலிக்கை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், உம்ரான் மாலிக் இந்திய அணியில் டிரம்ப் கார்டாக இருப்பார் என்று கூறி உள்ளார். ஏனென்றால் பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் 150 கிமீ வேகத்தில் வீசினார்கள். இதுவே அந்த அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது. அதேபோல் இந்திய அணியில் உம்ரான் மாலிகே மேஜிக்கை நிகழ்த்த முடியும்.

 யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

அதேபோல் ஹர்ஷல் பட்டேல் இந்திய அணிக்கு திரும்பினால் அணியின் பவுலிங் சிறப்பாக இருக்கும். இதனால் இன்றைய இந்திய அணி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று அறிவிக்கப்படும் இந்திய அணியில் ராகுல், ரோஹித், கோலி, சூர்யா குமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக்பாண்டியா , அக்சர் பட்டேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல், ஷமி / ஹர்ஷல் பட்டேல் / உம்ரான் மாலிக், பண்ட்/ ஷ்ரேயாஸ் ஐயர், தீபக்ஹூடா ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

English summary
Will Umran Malik get elected in Team India for T20 World Cup squad?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X