"ராஜதந்திரம்".. யார் அந்த 25 பேர்?.. எடப்பாடியை விடுங்க.. சசி அதிரடியால் டக்கென திரும்பும் டெல்லி
எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க சசிகலா ராஜதந்திரம் ஒன்றை துவக்கி உள்ளார்
சென்னை: சசிகலாவின் ராஜதந்திரத்தை பார்த்து அப்படியே வாயடைத்து போயுள்ளதாம் டெல்லி பாஜக.. அத்துடன் எடப்பாடி பழனிசாமி தரப்பும், சசிகலாவின் முயற்சிகளை எப்படி முறியடிக்கலாம் என்ற யோசனையிலும் இறங்கி உள்ளாராம்.
கட்சியை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தொடர்ந்து இறங்கி வருகிறார்.. மற்றொருபக்கம் எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், சசிகலா தலையெடுப்பதை பாஜக விரும்பவில்லை என்று ஏற்கனவே சொல்லப்பட்டது.. காரணம், சசிகலாவுக்கு தென்மண்டலங்களில் மட்டுமே ஆதரவு இருப்பதால், அவருக்கு சப்போர்ட் செய்வதிலும் பாஜக ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டவில்லையாம்..

எடப்பாடி பழனிசாமி
அதனால்தான், தன்னுடைய இந்த மைனஸையே சசிகலா தரப்பு, பிளஸ் ஆக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "அதிமுகவின் எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். நிச்சயமாக அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன்... அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்கள் முடிவு தான் எடுபடும்.. அடுத்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. வரும் காலத்தில் அதிமுக எமது தலைமையில் இயங்கும் என்று அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
சசிகலா இப்படி பேசியதுதான், எடப்பாடி தரப்புக்கு மேலும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.. சசிகலா ஏன் சொன்னார்? எந்த அடிப்படையில் இப்படி பேசினார்? என்பதே அவரது சந்தேகமாக உள்ளதாம்.. அதனால், அதிருப்தியாளர்களை கண்காணிக்கவும், அவர்களை சமாதானப்படுத்தவும் எடப்பாடி தரப்பு முயற்சியில் இறங்கிவிட்டதாம்.. அந்த வகையில்தான், டெல்டாவின் சீனியரும், மாஜி அமைச்சருமான அவர் பெயர் கடந்த ஒரு வார காலமாகவே அடிபட்டு வருவதையும் எடப்பாடி தரப்பு கவனிக்காமல் இல்லை.

தஞ்சாவூர்
சசிகலா கடந்த முறை தஞ்சாவூர் சென்றபோது அந்த புள்ளியை நேரிலேயே சந்திக்க திட்டமிட்டதாகவும், அதன்பிறகு, தனக்கு நெருக்கமானவர் ஒருவரை அனுப்பி பேசியதாகவும்கூட தகவல் வெளியானது... அதற்கேற்றாற்போல், சில தினங்களுக்கு முன்பு, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திலிருந்து அவர் பாதியிலேயே வெளியேறியதும் நடைபெற்றது...

சமாதானம்
இதனால் அதிர்ந்து போன அதிமுக நிர்வாகிகள், அவரை சமாதானம் செய்து அலுவலகத்துக்கு திரும்ப வர செய்ய முயற்சித்தும் முடியவில்லையாம்.. அந்த சீனியர் பிடிகொடுக்காமல் நழுவியதையும் எடப்பாடி தரப்பு கவனிக்காமல் இல்லை.. எப்படியும் அந்த சீனியர் தன் பக்கம் வரும் என்று சசிகலா தரப்பு நம்புகிறது.. ஆக, இதுவும் சசிகலாவுக்கு ஒரு பிளஸ் ஆக அமைந்துள்ளது.

30 எம்எல்ஏக்கள்
அடுத்ததாக, அதிமுகவின் 30 எம்எல்ஏக்களை வளைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.. அதாவது, கட்சி தலைமைக்கு எதிராக மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் ஒரு அணியாக ஒன்றிணைந்தால் கட்சி தாவல் தடைச் சட்டம் பாயாது என்பது பொதுவான விதிமுறை.. இப்போதைக்கு சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 66 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதில் 22 எம்எல்ஏக்கள் ஒரு குழுவாக சசிகலாவை ஆதரித்தால் கட்சித் தாவல் தடைச்சட்டம் அவர்கள் மீது பாயாது. அதனால் 30 எம்எல்ஏக்களை குறி வைத்து சசிகலா தரப்பு பேர அரசியலை கையில் எடுத்துள்ளது.

சசிகலா
மற்றொருபக்கம், திமுகவை முன்பைவிட வெளிப்படையாகவே டேமேஜ் செய்ய ஆரம்பித்துள்ளார் சசிகலா.. குறிப்பாக, திமுகவின் ஒரு வருட ஆட்சியை விமர்சித்ததே அதற்கு சாட்சியாகும்.. சட்டம் ஒழுங்கு சரியில்லை, வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.. நான் ஆட்சிக்கு வந்தால், அம்மா எப்படி செய்தார்களே, அதுபோலவே நல்லாட்சி தருவேன், மக்களின் கஷ்டத்தை நான் போக்குவேன் என்று திமுகவை விமர்சிக்க இதுவே காரணமாம்.. அதுமட்டுமல்ல, திமுகவை விமர்சிப்பதன் மூலம், பாஜகவின் ஆதரவு தன் மீது திரும்பும் என்றும் கணக்கு போடுகிறாராம்..

பாஜக
இன்னும் ஓபனாக சொல்லப்போனால், அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு, திமுகவுக்கு டஃப் தரும் ஒரே தலைவராக தன்னை உயர்த்தி கொள்ளும் பகீரத முயற்சியில் சசிகலா இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.. ஆக மொத்தம், சசிகலாவின் இந்த அதிரடிகளை, எடப்பாடி பழனிசாமி சமாளிக்க வேண்டி உள்ளது, திமுகவும் உற்றுநோக்க வேண்டி உள்ளது, பாஜகவும் கவனிக்க வேண்டி உள்ளது.. சசிகலாவின் ராஜதந்திரம் ஒர்க் அவுட் ஆகிறதா என்று பார்ப்போம்..!
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications