Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக மூட்டு நோய் தினம்..சனி சூரியன் கூட்டணி..யாருக்கெல்லாம் ஆர்த்ரடைடிஸ் வரும்? பரிகாரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வயதானவர்களுக்கு மட்டுமல்ல இப்போதெல்லாம் 30 வயதை தாண்டியவர்களுக்கே மூட்டு வலி பாடாய் படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 தேதி உலக மூட்டு நோய் தினமான அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மூட்டு நோய் வராமல் தடுக்கும் பிசியோதெரபி வழிமுறைகள் மற்றும் மூட்டு நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர உதவும் பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. இந்த நோயானது ஆர்த்ரைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, 1996-ஆம் ஆண்டிலிருந்து இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.

இந்த தினமானது ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாக்கு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை உண்டாக்கவும், அதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கவும் உதவுகிறது.

முடக்கு வாதம்

முடக்கு வாதம்

முடக்குவாதம் என்பது உடலின் தாங்குதிறன் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாட்டால் உடலின் உறுப்புகளை பாதிக்கும் நோயாகும். அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது ருமடாயிடு ஆர்த்ரைடிஸ் என அழைக்கப்படுகிறது.

ஆர்த்ரடைடிஸ்

ஆர்த்ரடைடிஸ்

மூட்டுத்திசுக்கள் பாதிப்படைந்து பின் எலும்புகளின் வடிவமைப்பையே மாற்றி விடும். ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் ஆகும். ஆர்த்ரடைடிஸ் உடலில் உள்ள 170 க்கும் மேற்பட்ட எலும்பு இணைப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை குறிக்கும். இதனால் வலி, மூட்டுகளின் வளையும் தன்மை இழந்து விரைப்பான நிலை மற்றும் வீக்கம் போன்றவை மூட்டு இணைப்புகளில் ஏற்படும்.

அறிகுறிகள் என்னென்ன

அறிகுறிகள் என்னென்ன

மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும். சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாது.

ஜோதிட காரணங்கள்

ஜோதிட காரணங்கள்

ஆர்த்ரைடிஸ் எனும் முடக்குவாத நோய்க்கு ஜாதகத்தில் மந்தன் எனப்படும் சனீஸ்வரனே முக்கிய பங்கு வகிக்கிறான். என்றாலும் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது. உடம்பின் கட்டுமானத்திற்கு முக்கியமான எலும்பு சம்மந்தமான வியாதிகளை ஜாதகத்தில் நில ராசி அதிபதிகளின் நிலையை கொண்டு அறிய முடிகிறது. அந்த விதத்திலும் நில ராசி அதிபதிகளான சுக்ரன் (ரிஷபம்) , புதன் (கன்னி) மற்றும் சனி (மகரம்) ஆகியவற்றின் தொடர்பு முடக்கு வாதம் மற்றும் எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.

கால்சியம்

கால்சியம்

அல்லோபதி மருத்துவத்தில் சுண்ணாம்பு சத்து குறைபாடு எனும் கால்சியம் சத்து குறைவே இந்த நோய்க்கு காரணம் என்கிறது. அந்த விதத்திலும் கால்சியம் எனும் தாதுவிற்கு காரக கிரகம் சனியே ஆகும். மேலும் கால்சியம் சமநிலைக்கு மாங்கனிசு எனப்படும் மெக்னிஷியம் காரக கிரகம் சூரியன் இரும்பு சத்து காரக கிரகம் செவ்வாய் ஆகியவற்னின் நிலைப்பாடும் இந்த நோயை தெரிவிக்கிறது. மேலும் சர்க்கரை சத்து அதிகமாவதும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தி முடக்கு வாதம் மற்றும் எலும்பு புரைநோயை ஏற்படுத்துகிறது.

சனி சூரியன் தொடர்பு

சனி சூரியன் தொடர்பு

எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் நின்றாலும் வாதநோய் ஏற்படுகிறது. பத்தாம்வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இனைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது. வர்க சக்கரங்களில் நோயை குறிக்கும் சஸ்தாம்ஸத்தில் லக்னத்திற்கு ஆறில் சனி நிற்பது மற்றும் ஆட்சி மற்றும் உச்ச வீடுகளில் நிற்பது,

ஜாதகத்தில் கிரகங்கள்

ஜாதகத்தில் கிரகங்கள்

சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நின்றால் முடக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சனியும் சந்திரனும் 12ம் வீட்டில் நிற்பது, சூரியன், சந்திரன் மற்றும் சனி லக்னத்தோடு தொடர்பு கொள்வது, சனியும் சந்திரனும் 6 அல்லது 9ம் வீட்டில் நிற்பது, சனியும் ராகுவும் 2அல்லது மூன்றாம் வீட்டில் நிற்பது. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய எலும்போடு தொடர்புடைய கிரகங்கள் லக்னத்தில் நின்று சனியோடு தொடர்பு கொள்ளும்போது வாத நோய் ஏற்படுகிறது.

பரிகாரங்கள்

பரிகாரங்கள்

தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகம் சொல்வது மற்றும் கேட்பது எலும்புக்கு காரகனாம் சூரியனுக்கு உகந்தது. சனிஸ்வரபகவானுக்கு உகந்த சனி கிழமை மற்றும் புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிக்கலாம். நல்லெண்ணை சனியின் காரகம் பெற்று மூட்டுகளுக்கு உயவுப்பொருளாக பயன்படுவதால் மூட்டு தேய்மானத்தை குறைக்கிறது. திருநள்ளாறு, திருநாரையூர், குச்சனுர், சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலுர் ஆகிய சனி ஸ்தலங்களுக்கு அவ்வப்பொது சென்று வருவது நல்லது. புதன் கிழமைகளில் பெருமாள் கோயில் அல்லது நவகிரக புதன் சன்னதிகளில் நரம்பை பலப்படுத்தும் புரத சத்து மிகுந்த பாசிப்பயறு சுண்டல் செய்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு விநியோகம் செய்துவிட்டு சாப்பிடுவது. செவ்வாயின் காரகம் நிறைந்த பிஸியொதிரபி எனப்படும் உடற்பயிற்சியை செய்வது மிகவும் நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+