சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது தமிழ்நாடு.. இந்திக்கு இடமில்லை.. இணையத்தில் விஸ்வரூபம் எடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சொமேட்டோ நிறுவனத்தின் இந்தி திணிப்பு சர்ச்சை இணையத்தில் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளது.

ஒவ்வொரு முறையும்.. எதோ ஒரு மூலையில் கொஞ்சமாக இந்தி திணிப்பு நிகழ்ந்தாலும் அதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுப்பது ஒரு தமிழராகவே இருப்பார். 1950களில் இருந்தே தமிழ்நாடுதான் இந்தியை தனியாக எதிர்த்து கொண்டு இருக்கிறது. சமீபத்திய அரசியல் மாற்றங்கள் வங்கம், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களையும் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க வைத்துள்ளது.

இணையத்தில் களமாடும் நெட்டிசன்கள் தொடங்கி சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் வரை ஒவ்வொருவரும் இந்தி திணிப்பை ஒவ்வொரு வகையில் எதிர்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படித்தான் நேற்று தமிழ்நாட்டில் இருந்து சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்த நபரும்.. தன்னை அறியாமலே.. இந்தி திணிப்பிற்கு எதிரான பெரிய இணைய போராட்டத்தை எழுப்பிவிட்டு இருக்கிறார்.

ஒரே ஒரு டேட்டா மிஸ்ஸிங்.. கோவாக்சினுக்கு இன்னும் கிடைத்த அவசர அனுமதி.. ஹூ சொன்ன காரணம்! ஒரே ஒரு டேட்டா மிஸ்ஸிங்.. கோவாக்சினுக்கு இன்னும் கிடைத்த அவசர அனுமதி.. ஹூ சொன்ன காரணம்!

விகாஸ்

விகாஸ்

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஸ் என்ற இளைஞர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்த உணவுகளில் சில அவருக்கு கிடைக்கவில்லை. இதை பற்றி சொமேட்டோவில் கஸ்டமர் கேர் சாட் பாக்சிலும் அவர் பேசி இருக்கிறார். தனக்கு ரீபண்ட் வேண்டும் என்று ஆகாஷ் கேட்க.. சொமேட்டோ அதிகாரி ரீபண்ட் கொடுக்க மறுத்துள்ளார். அதோடு விடாமல் உங்களின் ஆங்கிலத்தால் என்னால் உங்களுடன் சரியாக பேச முடியவில்லை. இந்தியாவின் தேசிய மொழி இந்தி.. நீங்கள் இந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று திமிராக பதில் அளித்துள்ளார்.

Recommended Video

    தவறாக பேசிய ஊழியரை பணி நீக்கம் செய்து விட்டோம்.. மன்னிப்பு கேட்ட Zomato
    இந்தி

    இந்தி

    அந்த சொமேட்டோ பெண் அதிகாரியின் இந்த பதில் இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனே ட்வீட்டரில் அந்த ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்த ஆகாஷ்.. சொமேட்டோ நிறுவனம் இப்படித்தான் கஸ்டமர்களை நடத்துகிறதா? இதில் உங்கள் ஊழியர் எனக்கு இந்தி பாடம் வேறு எடுக்கிறார் என்று கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    நீக்கம்

    நீக்கம்

    இதை பற்றி உடனடியாக விசாரிப்பதாக கூறிய சொமேட்டோ நிறுவனம் அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்கிவிட்டு பின் மீண்டும் எச்சரிக்கை கொடுத்துவிட்டு பணியில் சேர்த்துக்கொண்டது. அதோடு சொமேட்டோ நிறுவனம் தமிழ்நாடு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டது. ஆனால் சோமோட்டோ நிறுவனர் தீபந்தர் கோயல்.. இந்தியாவில் இன்னும் கொஞ்சம் சகிப்புத்தன்மை கூடுதலாக இருக்கலாம் என்று கூறி, தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை விமர்சனம் செய்து இருந்தார்.

    சர்ச்சை

    சர்ச்சை

    இந்த நிலையில்தான் தற்போது இணையத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வைரலாகி உள்ளது. இந்திக்கு எதிராக தமிழர்கள், வங்காளிகள் , கன்னடர்கள் என்று பலர் ட்வீட் செய்து வருகிறார்கள். பல வடஇந்தியர்கள் மத்தியில் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற கண்ணோட்டம் உள்ளது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி கிடையாது என்ற அடிப்படை புரிதல் அவர்களிடத்தில் இல்லை. இந்த நிலையில்தான் இந்தி தேசிய மொழி கிடையாது என்ற டிரெண்ட் ட்வீட்டரில் வைரலாகி வருகிறது .

    வைரல்

    வைரல்

    #HindiIsNotNationalLanguage என்ற டேக் டிரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதில் இந்தி வெறும் அலுவல் மொழிதான். அது தேசிய மொழி கிடையாது. இந்தி பேசுங்கள் என்று பிற மாநில மக்களை நீங்கள் வற்புறுத்த முடியாது என்று பல தமிழர்கள், இந்தி அல்லாத மாநில மக்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். அதோடு இந்தி மொழி பேசும் மக்கள் பலர் இப்போதுதான் இந்தி தேசிய மொழி கிடையாது என்பதை தெரிந்து கொண்டு பதில் அளித்து வருகிறார்கள்.

    எதிர்ப்பு வைரல்

    எதிர்ப்பு வைரல்

    இன்னும் பலர் தங்கள் மாநிலத்தில் நீங்கள் வேலை செய்தால் எங்கள் மாநில மொழியை கற்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் இணைப்பு மொழியை கற்க வேண்டும். இது தமிழ்நாடு.. எங்கள் மாநிலத்தில் பிஸ்னஸ் செய்யும் நீங்கள் எங்கள் மொழியில்தான் சேவை வழங்க வேண்டும். உங்களுக்காக நாங்கள் அந்நிய மொழிகளை கற்க முடியாது என்று கூறி பலர் டிரெண்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள். சொமேட்டோ சர்ச்சை இணையத்தில் புதிய இந்தி திணிப்பு போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளது.

    English summary
    Tamilians Anti Hindi Imposition row against Zomato creates trend in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X