மக்களிடம் மனுவை வாங்கிவிட்டு பிக் பாஸ் ஷோவுக்கு போய்விடுவார் கமல்! காய்ச்சி எடுத்த வானதி சீனிவாசன்!
கோவை: சட்டமன்றத் தேர்தல் முடிந்து இத்தனை மாதங்கள் கடந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்திருக்கிறது போல் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி மக்களை சந்தித்த கமல்ஹாசன் அவர்களிடத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றுள்ள நிலையில் வானதி இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டு பாஜக சார்பில் போட்டியிட்ட வானதியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை தெற்கு
கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் கோரிக்கை மனுக்களையும் பெற்றுச் சென்றிருக்கிறார். இந்த நிகழ்வு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தரப்பை கொதிப்படைய வைத்துள்ளது. இதனிடையே தனது தொகுதிக்குள் வந்து சென்ற கமல்ஹாசன் குறித்து பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், சட்டமன்றத் தேர்தல் முடிந்து இத்தனை மாதங்கள் கடந்த நிலையில், கமல்ஹாசனுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்திருக்கிறது போல் என கிண்டல் செய்தார்.

பிக் பாஸ் கமல்
மேலும், பொதுமக்களிடம் கமல்ஹாசன் மனு வாங்கக் கூடாது என்று தாம் சொல்லவில்லை என்றும் தாராளமாக வாங்கலாம் ஆனால் அதனை வாங்கிக் கொண்டு போய் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தீர்வு வழங்கலாம் என கமல் நினைக்கக் கூடாது என காய்ச்சி எடுத்தார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கமல்ஹாசன் நேரடியாக களத்திற்கு வந்து தாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை விளக்க வேண்டும் எனக் கூறினார்.

2021 சட்டமன்றத் தேர்தல்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றவர் வானதி சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தோல்விக்கு பிறகு பிக் பாஸ், திரைப்பட ஷூட்டிங் என பிஸியாக இருந்த கமல்ஹாசன் தற்போது மீண்டும் அரசியல் களமாடத் தொடங்கியிருக்கிறார். முதற்கட்டமாக கோவைக்கு விசிட் அடித்துள்ள அவர் விரைவில் மற்ற ஊர்களுக்கும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே பரவலாக எழ ஆரம்பித்துள்ளது. தனித்துப் போட்டியா அல்லது திமுகவுடன் கூட்டணியா என இப்போதே கமல் கட்சியை மையமாக வைத்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
-
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications