17,000 கோடி வசூல் பண்ணியிருக்காங்க.. கோவை Myv3Ads இன் உண்மையான ஓனர் யார் தெரியுமா? வழக்கறிஞர் பேட்டி
கோவை: கோவையில் செயல்படும் 'My V3 Ads' நிறுவனம் இதுவரை "17,000 கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்காங்க..." அந்த பணத்தை வாங்கி மாத்திரை கொடுக்குறாங்க, அந்த மருந்துக்கு ஜிஎஸ்டி எங்கே. இந்த நிறுவனத்தின உண்மையான உரிமையாளர் யார் தெரியுமா? என அடுக்கடுக்காக புகார்களையும் கேள்விகளையும் எழுப்பி பதில் அளித்துள்ளார் வழக்கறிஞர்.
சக்தியானந்தன் என்பவர் கோவையை தலைமையிடமாகக் கொண்டு My v3 Ads என்ற ஆப்பை நடத்தி வருகிறார். இவர் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இந்த My v3 Ads யூடியூப் சேனலில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்றும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று My v3 Ads இல் கூறப்பட்டுள்ளது.

மேலும் பணம் செலுத்தும் நபர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படுகிறதாம். மேலும் புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படுகிறதாம். இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலத்தவரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வந்ததாக பணம் கட்டியவரகள் கூறி வருகிறார்கள்
இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்று புகார் எழுந்தது. மேலும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாக My v3 Ads நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் My v3 Ads மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே My v3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி கோவை நீலாம்பூர் பைப்பாஸ் சாலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் அந்த பகுதியே ஸ்தம்பித்து போனது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கலைந்து போக செய்தனர்.. அதேநேரம் சட்டவிரோதமான கூட்டத்தில் ஒன்றுசேர ஆட்களை சேர்த்தல், முறையற்ற தடுப்பு, பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் My v3 Ads நிறுவனத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சக்தியானந்தன் , கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார். இந்த சூழலில் புகார் கொடுத்தவர்களின் சார்பான ஆஜரான வழக்கறிஞர் My v3 Ads நிறுவனத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், சத்தியானந்தன் 65 லட்சம் பேர் பணம் போட்டுள்ளதாக கூறுகிறார். இதில் முதலில் சேர்ந்த 5லட்சம் பேருக்கு பணம் வருகிறது. 1.26 லட்சம் ரூபாய் கொடுத்தவர்கள் என்று பார்த்தால், சுமார் 17 லட்சம் பேரிடம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார்கள்.. ஆக மொத்தம் 170000 கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கு.. 17000 கோடி ரூபாய்க்கு என்ன கணக்கு..
அதற்கு 200 புதிய நிறுவனங்களை உருவாக்கியிருக்காங்க.. இதெல்லாம் துணை நிறுவனங்கள்.. எல்லா பேரும் அட்ரஸ்சும் எங்களிடம் இருக்கிறது,. இந்த 200 நிறுவனங்களிடம் இருக்கிற காசை தான்.. இவங்க கொடுக்குறாங்க.. அந்த மாத்திரை என்பது ஒரு வசிய மாத்திரை.. அந்த வசிய மாத்திரையை தயாரிப்பவர் ரவி.. இவர் கடலூர் மாவட்டத்தில் அந்த கம்பெனி வைத்திருக்கிறார்.. பாண்டிச்சேரியில் அந்த நிறுவனம் இருக்கிறது. அவர் தான் கவர்னரிடம் போட்டோ எடுக்க வைக்கிறார்.. அவர் தான் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க வைத்திருக்கிறார்.. எனவே இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே வி3 ஆன்லைன் மாதிரி 15 நிறுவனங்களை உருவாக்கி மூடியிருக்காங்க.. வி3 ஆன்லைனில் மட்டும் 1000 கோடி சம்பாதித்திருக்கிறார்கள்... ஆயிரம் கோடி வந்த உடன் அந்த கம்பெனியை மூடிவிட்டார்கள். இப்ப இந்த கம்பெனியில் 17000 கோடி கிட்ட வசூல் பண்ணிட்டாங்க (இது அவங்க சொல்ற கணக்குப்படி).- 17000 கோடியை அடிச்சிட்டு ஓடனும்.. அடிக்கிறதுக்கு ஒரு ஆள் வேண்டும். அடிக்க போறது யாரு விஜயராகவன்.. மாட்டப்போறது யாரு.. சத்யானந்தன்.. இவருக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை..
கோவை My v3 ads ரோடு மேப்.. 2014 முதல் 2024 வரை எப்படி எல்லாம் வந்தது.. வெளியான புது விவரம்
எம்எல்எம் நிறுவனத்தை பொறுத்தவரை கொடுக்குற பணத்திற்கு மாத்திரை தருகிறார்களாம். குறைந்தது மாத்திரைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி கட்டியிருந்தாலும் 17000 கோடி ரூபாய்க்கு எவ்வளவு ஜிஎஸ்டி கட்டியிருக்க வேண்டும்.. இந்த மருந்தை சப்ளை செய்த கடலூர் ரவி கட்டியிருக்கிறாரா.. ஹீரா ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் இவர் தான் மருந்து சப்ளை செய்தார். இப்ப இருக்குற மை விதி 3 ஆட்ஸ்க்கும் இவர் தான் மருந்து சப்ளை பண்றார்.. இந்த நிறுவனத்தின் உண்மையான உரிமையாளரான விஜய ராகவன் 11 முறை மொரிசீயஸ் போயிருக்காரு.. திருநெல்வேலியை செய்த விஜயராகவன் அவருடைய தம்பி சிவசங்கர், தங்கை குமாரி இவர்கள் தான் மை விதி ஆட்ஸ் நிறுவத்தின் உண்மையான ஓனர் ஆவார்கள்.. ஒரு லட்சம் வாங்கி கொண்டு மாதம் 12000 தருகிறார்களாம். வங்கியில் மாதம் 700 ரூபாய் தான் வட்டி தருகிறார்கள். ஐந்து வட்டிக்கு மேல் வாங்கினால் கந்துவட்டி.. 126000 வாங்கி கொண்டு மாதம் 12000 எப்படி கொடுக்க முடியும்.. இது எந்த சட்டத்தில் வரும் என்ற ஏன் கேட்க மறுக்கிறீர்கள்? " இவ்வாறு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications