Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கருணாநிதியை விட ஸ்டாலின் டேஞ்சர்.." அதிமுக கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி!

Subscribe to Oneindia Tamil

கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கூட இத்தனை பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படியில்லை என முன்னாள் அமைசசர எஸ். பி. வேலுமணி தெரிவித்தார்.

Recommended Video

    கருணாநிதியை விட ஸ்டாலின் டேஞ்சர்.. அதிமுக கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி!

    கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாநகர் மாவட்டம், கோவை புறநகர், தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    அதிமுக தலைமை அறிவித்துள்ளபடி இன்று நடைபெறும் கண்டன ஆர்பாட்டம் குறித்தும் தொண்டர்களிடம் ஆலோசனை நடைபெற்றது. இதன்பின்னர் பேசிய எஸ்.பி.வேலுமணி பேசுகையில், திமுக அரசு பழிவாங்கும் நோக்குடன் முன்னாள் அமைச்சரும், திமுகவினரின் முறைகேடுகளை ஊடகத்தின் மூலம் கருத்துக்களை பதிவு செய்யும் ஜெயக்குமார் மீது பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.

    அதிமுக தொண்டர்கள்

    அதிமுக தொண்டர்கள்

    இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுக தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றினார்கள் எனவும் இந்த தேர்தலை பெருத்தவரை மக்கள் திமுகவிற்கு ஓட்டுபோட வாய்ப்புகளே இல்லை. திமுகவிற்கு ஓட்டளிக்க ஏதாவது காரணம் வேண்டும். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் திமுக வாக்கு பெற்றுள்ளது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விவிபாட்

    விவிபாட்

    விவிபாட் இல்லாதது தோல்வியை தந்துள்ளது. ஜனநாயக ரீதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் வெற்றி செயற்கையானது. காவல்துறையினர் நேர்மையாக, நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். எத்தனை வழக்குகள் போட்டாலும் தயங்க மாட்டோம். ஆனால் பொய் வழக்கு போடாதீர்கள்.

    கடும் உழைப்பு

    கடும் உழைப்பு

    கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கோவையில் வெற்றி பெறாததால்தான் கோவை மீது சிறப்பு கவனம் செலுத்தியது. நாமும் சளைக்காமல் தேர்தல் பணியாற்றினோம். ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே தூங்கினோம். மற்ற நேரங்களில் தேர்தல் வெற்றிக்காக உழைத்தோம். கோவை, திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிகளை பிடிக்கும் சூழல் 100 சதவீதம் இருந்தது.

    திமுக முதுகில் குத்தியது

    திமுக முதுகில் குத்தியது

    ஆனால் திமுக முதுகில் குத்தி வெற்றியைத் தட்டி பறித்தனர். விவிபாட் சீட்டு வைக்காத போதே இவர்கள் தேர்தலை எப்படி நடத்துவார்கள் என தெரிந்துவிட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குக் கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. ஸ்டாலின் மிகவும் மோசமாக உள்ளார் என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+