கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பையா கவுண்டர்".. அதிர வைத்த ரெய்டு.. கோடிக்கணக்கில் சிக்கிய ஆவணங்கள்.. ஐடி தகவல்!

நேற்று நடந்த ஐடி ரெய்டில் சோதனையில் 150 கோடி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கோவை: திமுக நிர்வாகி பையா கவுண்டர் நந்தாவின் கல்வி நிறுவனங்கள் உள்பட 22 இடங்களில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் கணக்கில் வராத ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரி துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். கோவையை சேர்ந்த மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர். கிருஷ்ணனின் வீட்டில் இந்த சோதனை நடந்தது.. இவரை பையா கவுண்டர் என்றும் அழைப்பார்கள்.. இவரது வீடு உட்பட அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் என மொத்தம் 22 இடங்களில் ரெய்டு நடந்தது.

IT seizes crores worth documents from its recent raids in Tamil Nadu

இதில் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனமும் அடங்கும்... வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.. ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை நேற்று கிளப்பி விட்டது.

இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்புஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு

தற்போது, நந்தா கல்வி நிறுவனத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.150 கோடிக்கும் அதிகமான ரொக்க பரிவர்த்தனைகள் மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் 5 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணம் எப்படி வந்தது என்று விசாரணை நடத்தப்பட்டது.. இறுதியில், மாணவர்களின் சேர்க்கையில் அதிக ரொக்கம் கட்டணமாக வசூலித்து, அரசிடம் குறைவான கட்டணத்தை கணக்கில் காட்டியது தெரியவந்தது. இதை தவிர, கணக்கில் காட்டாத ரொக்கத்தை பிற நிறுவனங்களில முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சில லாக்கர்கள் உள்ளதாகவும் அவற்றை திறந்து சோதனையிட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
IT seizes crores worth documents from its recent raids in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X