சசிகலாவுக்கு சம்மன்! நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! கோடநாடு கொலை வழக்கில் போலீசார் நடவடிக்கை
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு சசிகலாவிடம் விசாரணை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சசிகலாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மாயமான சொத்து ஆவணங்கள் தொடர்பாக சசிகலாவிடம் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23 நள்ளிரவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. ஓம் பஹதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணதபா காயமடைந்தார்.
மேலும் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

5 ஆண்டு விசாரணை
இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் 2017 ஏப்ரல் 28ல் விபத்தில் பலியானார். இதனால் இந்த வழக்கு பல மர்ம முடிச்சுகளுடன் தொடர்கிறது. இதனால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை.

217 பேரிடம் விசாரணை
இதனால் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் விசாரைணை தீவிரப்படுத்தி உள்ளனர். பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் சில நாட்களுக்கு முன்பு கோவை பிஆர்எஸ் வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை வழக்கு தொடர்பாக 217 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

சசிகலாவிடம் விசாரணை
இதற்கிடையே வழக்கு தொடர்பாக சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இந்நிலையில் தான் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சசிகலாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக கூறப்பட்டுள்ளது.

விசாரணை எதற்கு
இந்த விசாரணையின்போது மாயமான சொத்து ஆவணங்கள், சென்னை ஓட்டலில் கிடைத்த சொத்து ஆவணங்கள் குறித்த கேள்விகளை போலீசார் கேட்கலாம் என கூறப்படுகிறது. தமிழக அரசியலை பொறுத்தவரை சசிகலாவின் செயல்பாடு தற்போது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சசிகலாவிடம் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. இதனால் இது கவனம் பெற்றுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications