கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பு நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. தொடரும் பதற்றம்..

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இரவு ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக-கேரள கேந்திர பொறுப்பாளராக ஆனந்த கல்யாண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் பற்றி சில கருத்துகளை தெரிவித்தார். இது சர்ச்சையானதால் பாஜகவினர் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆ ராசாவை மிரட்டியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே தான் நேற்று என்ஐஏ சார்பில் கோவையில் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் மீது நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கோவையில் நடந்தன.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்.. ரூ.221 கோடியை செலவு செய்த பாஜக.. மஹுவா மொய்த்ரா எம்பி பகீர் தகவல் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்.. ரூ.221 கோடியை செலவு செய்த பாஜக.. மஹுவா மொய்த்ரா எம்பி பகீர் தகவல்

பெட்ரோல் குண்டு வீச்சு

பெட்ரோல் குண்டு வீச்சு

இதற்கு மத்தியில் தான் நேற்று இரவு கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பு நிர்வாகி

ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பு நிர்வாகி

இந்நிலையில் தான் கோவை புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பு நிர்வாகி ஆனந்த கல்யாண கிருஷ்ணன் வீடு உள்ளது. இவர் சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக-கேரள கேந்திர பொறுப்பாளராக ஆனந்த கல்யாண் உள்ளார். இந்நிலையில் இன்று இரவ அவரது வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பு நிர்வாகி

ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பு நிர்வாகி

இந்நிலையில் தான் கோவை புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பு நிர்வாகி ஆனந்த கல்யாண கிருஷ்ணன் வீடு உள்ளது. இவர் சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக-கேரள கேந்திர பொறுப்பாளராக ஆனந்த கல்யாண் உள்ளார். இந்நிலையில் இன்று இரவ அவரது வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

கேமராக்கள் ஆய்வு

கேமராக்கள் ஆய்வு

இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆனந்த் கல்யாண் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமாராக்களை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை கைது செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் நடந்த 5வது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் இதுவாகும் என கூறப்படுகிறது.

கண்காணிப்பு தீவிரம்

கண்காணிப்பு தீவிரம்

கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவம் பற்றி விசாரிக்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அதிவிரைவுப்படையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Petrol bombs are being thrown continuously in Coimbatore. In this case, a petrol bomb was hurled at the house of Ananda Kalyan, who is in charge of the Tamil Nadu-Kerala Center of the Sanskrit Bharati Organization, a branch organization of the RSS, and has increased the tension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X