பெட்ரோல் குண்டுவீச்சு.. சிசிடிவி வீடியோ கொடுத்தும் நடவடிக்கை இல்லை.. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
கோவை: பாஜக தொண்டர்களின் வீடுகளில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினருக்கு சமர்ப்பித்தும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளில் உள்ள தலைவா்கள், தொண்டா்களின் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் கடந்த நான்கு நாள்களாக பெட்ரோல் குண்டுகள் வீசுதல், தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிப்பினை ஆய்வு செய்து மாநிலத் தலைமையிடம் அறிக்கை சமா்ப்பிக்க பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாஜக குழு அமைப்பு
கன்னியாகுமரி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி தலைமையிலும், திருச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் தலைமையிலும், வேலூா், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி தலைமையிலும், கோவையில் வானதி சீனிவாசன் தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ள குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கோவையில் வானதி சீனிவாசன் ஆய்வு
இந்த நிலையில் கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆய்வில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கோவையில் நடைபெறும் சிறுசிறு சம்பவங்கல் பெரும் விளைவை ஏற்படுத்தக் கூடியது. இதனால் முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடும் நடவடிக்கை தேவை
ஏனென்றால் வளர்ச்சி என்பது அமைதியையொட்டி வருவது தான். அமைதியை குலைத்துவிட்டு வளர்ச்சியை நினைத்து பார்க்க முடியாது. பொருளாதார ரீதியாக மாநிலத்திற்கு அதிக வருவாயை கொடுக்கக் கூடிய நகரம் கோவை. இங்கு சட்டம் - ஒழுங்கு கெடுவதை மாநில அரசு அனுமதிக்க கூடாது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசியல் அழுத்தம் இருக்கிறதா?
தொடர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கக் கூடிய சக்திகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். விளம்பரத்திற்கு பெட்ரோல் குண்டுவீச்சில் ஈடுபடுவோர் மீதும் சமரசமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான பல்வேறு சிசிடிவி காட்சிகளை பாஜக தரப்பில் காவல்துறையினருக்கு சமர்பித்துள்ளோம். ஆனால் தவறு செய்தவர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான சம்பவங்களை நடந்தும், இதுவரை கோவையில் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் காரணத்திற்காக நடவடிக்கை எடுக்க தவறக் கூடாது என்று தெரிவித்தார்.

மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும்
அதேபோல் திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications