கோவை "பிரதேசமா"? திமுக பெற்ற வெற்றியிலேயே நம்பர் 1.. ஸ்டாலினை வாரி அணைத்த கொங்கு.. கலங்கிய அதிமுக
கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றிகளிலேயே கோவையில் பெற்ற வெற்றிதான் மிகப்பெரியது ஆகும். திமுக இங்கு நினைத்து பார்க்க முடியாத சாதனையை செய்துள்ளது.
சந்தோசம்.. உற்சாகம்.. ஒரே குஷி.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்த பின் திமுக கேம்பில் இருக்கும் எமோஷன் இதுதான். மொத்த திமுக தரப்பும் ஏக குஷியில் இந்த வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.
15+ மாநகராட்சியை வென்றாலே அது பெரிய விஷயம் என்ற நிலையில்தான்.. திமுக 21 மாநகராட்சிகளையும் சொல்லி அடித்து உள்ளது. ஏற்கனவே எம்பி தேர்தலில் 1 எம்பி தவிர்த்து மாநிலம் முழுக்க வெற்றி.. சட்டசபையில் தனிபெரும்பான்மை நேற்று சந்தோசமாக இருந்த திமுகவிற்கு.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புல் மீல்ஸ் சாப்பிட்ட பின் கொடுக்கப்படும் "பிஸ்தா" ஐஸ்கிரீம் போல வந்து சேர்ந்து இருக்கிறது.

ஜெயலலிதா
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று 2016 சட்டசபை தேர்தலில் வென்ற பின் ஜெயலலிதா உற்சாகமாக சொன்னார். அப்படித்தான் தற்போது திமுகவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலைக்கு சென்று இருக்கிறது. 21 மாநகராட்சி வெற்றி பெரிய விஷயம் என்றால்.. இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலினோ கோவையை வென்ற குஷியில் இருக்கிறார். சட்டசபை தேர்தலில் கோவையில் ஒரு எம்எல்ஏ கூட கிடைக்காமல் வேலுமணியின் வியூகத்திடம் திமுக வீழ்ந்தது.

தர்ணா
தற்போது அதே கோவையில் வேலுமணி தர்ணா செய்யும் அளவிற்கு வியூகம் வகுத்து திமுக 100 வார்டுகளில் 76 வார்டுகளை தனியாக வென்றுள்ளது. இங்கு அதிமுக வென்றது வெறும் 3 வார்டுகள்தான். 8 மாதத்திற்கு முன் 0 எம்எல்ஏ என்ற நிலையில் இருந்து மாநகராட்சி மேயர் என்ற நிலைக்கு திமுக அசுர வேகத்தில் வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் கோவையில் தோற்றாலும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

கொரோனா
கொரோனா காலத்தில் மட்டும் 3 முறை நேரடியாக கோவைக்கு விசிட் அடித்தார். கோவையை வைத்து பாஜகவில் சிலர் கொங்கு நாடு பிரச்னையை உருவாக்கிய போது அதை முளையிலேயே கிள்ளி எறிந்தார். அதெல்லாம் போக கோவையில் பாஜக இருக்கிறது என்பதால் திமுகவிலேயே சிலர் கோவையை "கோவை பிரேதசம்" என்று கிண்டல் செய்து வந்தனர். இங்கெல்லாம் திமுக ஜெயிக்கவே ஜெயிக்காது, எப்படியும் பாஜக, அதிமுகத்தான் மேயர் பதவியை பெறும் என்று வெளியான கணிப்புகளை, வியூகங்களை எல்லாம் முறியடித்து திமுக இங்கு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கோவை
கோவை தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த வெற்றிக்கு பின் பெரிய பங்கு இருக்கிறது. இந்த கோவை வெற்றி மற்ற மாவட்ட, மாநகராட்சி வெற்றிகளை விட, மற்ற கொங்கு மண்டல வெற்றிகளை விட வித்தியாசமானது. திமுக பெற்ற வெற்றிகளிலேயே இதுதான் நம்பர் 1 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அது என்ன நம்பர் 1 வெற்றி என்று கேட்கிறீர்களா.. போட்டியிட்ட இடங்கள்.. வெற்றிபெற்ற இடங்களை வைத்து கணிக்கப்படும் வெற்றி சதவிகிதத்தில் திமுகவிற்கு கோவை அதிக வெற்றி சதவிகிதம் கொடுத்த மாநகராட்சி ஆகும்.

அதிக வெற்றி
கோவை மாநகராட்சியில்தான் தி.மு.க.கூட்டணியின் வெற்றி விகிதம் மற்ற 20 மாநகராட்சிகளில் பெற்ற வெற்றி விகிதங்களை விட அதிகம் ஆகும். கோவை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது 96% வெற்றியை பெற்றிருக்கிறது. திமுக வேறு எந்த ஒரு மாநகராட்சியிலும் இவ்வளவு பெரிய வெற்றியை பெறவில்லை. திமுகவிற்கு கோவைதான் நம்பர் 1 வெற்றியை கொடுத்துள்ளது.

வெற்றி விகிதம்
கோவையில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி விகிதம்
திமுக - 73
காங் - 9
சிபிஎம் - 4
சிபிஐ - 4
மதிமுக - 3
மமக - 1
கொமதேக - 2
இது போக
அதிமுக - 3
எஸ்டிபிஐ -1

ஸ்டாலின்
மொத்தமாக முதல்வர் ஸ்டாலினை கோவை இந்த முறை வாரி அணைத்து உள்ளது. இது ஒரு வகையில் பாஜகவின் வளர்ச்சியை கோவையில் தடுக்கும். அதேபோல் கோவையை கோட்டையாக கருதிக்கொண்டு இருந்த அதிமுகவிற்கு இது பெரிய கலக்கத்தை கொடுத்திருக்கும் என்றே கூறப்படுகிறது. திமுகவின் இந்த மேற்கு மண்டல எழுச்சி தமிழ்நாடு அரசியலில் வரும் நாட்களில் பெரிய அளவில் திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
-
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications