கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போச்சே! விறுவிறுவென கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு போன அண்ணாமலை.. வானதியை காணோமே! அட "அவரும்" ஆப்சென்ட்

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை வந்தார். முக்கியமான இரண்டு தலைவர்கள் இன்று இந்த நிகழ்வை புறக்கணித்தனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இந்த கார் வெடிப்பில் போலீசார் தகவல்களை வெளியிடும் அண்ணாமலை பல உறுதிப்படுத்தாத தகவல்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

அவரின் பேட்டிகள் சில சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக திமுகவினர் குற்றஞ்சாட்டினர். அதில், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள். மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை மாநில போலீசார் மீறிவிட்டதாக, அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார்.

எதற்கெடுத்தாலும் முந்திக்கொண்டு பேசும் அண்ணாமலை.. இதற்கு மட்டும் ஏன் வாய்திறக்கவில்லை? -ஈஸ்வரன் எதற்கெடுத்தாலும் முந்திக்கொண்டு பேசும் அண்ணாமலை.. இதற்கு மட்டும் ஏன் வாய்திறக்கவில்லை? -ஈஸ்வரன்

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த நிலையில்தான் இன்று கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை வந்தார். சம்பவ இடத்தில் பாதுகாப்பாக பலப்படுத்துவதற்காக போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். சூட்டை தணிப்பதற்காக போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்தான் அண்ணாமலை திடீரென கோவிலுக்கு சென்றுள்ளார். பாஜக நிர்வாகிகள் புடை சூழ அண்ணாமலை சம்பவ இடத்திற்கு போனார்.

கார் வெடிப்பு

கார் வெடிப்பு

ஒரு கார் வெடிப்பு நடந்த இடம்.. இன்று அங்கு என்ஐஏ விசாரணை வேறு நடப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கு அண்ணாமலை திடீரென வந்தார். அங்கு அண்ணாமலை வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். உள்ளே பூசாரிகளிடம் நீண்ட நேரம் அண்ணாமலை ஆலோசனை செய்தார். போலீசார் நடத்திய விசாரணை பற்றி அவர்களிடம் கேட்டறிந்தார்.

கோவை

கோவை

ஆனால் இந்த நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொள்ளவில்லை. இன்று கோவையில் பாஜக சார்பாக பந்த் நடத்தப்படும் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் தெரிவித்தனர். கோவை எம்எல்ஏ ஒருவர் இப்படி அண்ணாமலையின் வருகையின் போது அவருடன் இல்லாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக இன்று கோவையில் பாஜக சார்பாக பந்த் நடத்தப்படும் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

கோவை மாவட்ட பாஜக சார்பாகவும் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இந்த பந்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பந்த்திற்கு மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார். நாங்கள் பந்த் நடத்தியே தீருவோம் , முடிந்தால் ஆளும் திமுக இதை தடுக்கட்டும் என்று வானதி சீனிவாசன் சவால் விட்ட அதேநாள்தான் அண்ணாமலை இப்படி பேசி இருந்தார். அவரின் இந்த கருத்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

பிளவா?

பிளவா?

பாஜகவிற்கு உள்ளே ஏதாவது பிளவு இருக்கிறதா? அண்ணாமலை ஏன் இப்படி வானதி சொன்ன கருத்துக்கு எதிராக பேசுகிறார் என்று கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில்தான் இன்று அண்ணாமலை கோவிலுக்கு வந்த நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் இன்னொரு மூத்த தலைவர் சி பி ராதாகிருஷ்னனும் கோவையில் இருந்தும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இது பாஜகவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Why was Vanathi Srinivasan not present when Annamalai checked the Coimbatore Blast area?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X