கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், அஜித் தோவல் சந்திப்பு!

Google Oneindia Tamil News

கொழும்பு: அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இலங்கை அதிபராக இருந்த சிறிசேனா, இந்தியாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய நிலையில், கோத்தபய ராஜபக்சே, அதிபரான பிறகு அஜித் தோவல் இலங்கைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

Ajit to met Sri Lanka President

இன்று கோத்தபாய ராஜபக்சவை சந்தித்த அஜித் தோவல், அடுத்ததாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், பொருளாதார திட்டங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த சந்திப்புகளின் போது, கொழும்பில் அமைக்க உள்ள கிழக்கு கன்டெய்னர் முனையம் மற்றும் மட்டாலா சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு உட்பட இலங்கையில் பல முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

அடுத்த ஷாக்.. மகளை சீரழித்த கும்பல்.. புகாரளித்த தாய்.. பூட்ஸ் காலால் மிதித்து.. கொடூர கொலை.. வீடியோஅடுத்த ஷாக்.. மகளை சீரழித்த கும்பல்.. புகாரளித்த தாய்.. பூட்ஸ் காலால் மிதித்து.. கொடூர கொலை.. வீடியோ

கடந்த வாரம் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பின்னர் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல பிரச்சினைகள் மறு ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த நிலையில்தான், தோவல் இலங்கை சென்றுள்ளார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இலங்கை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நாடு. சீனா அங்கு செல்வாக்கை செலுத்தி வருகிறது.

English summary
National Security Advisor Ajit Doval is on a day-long visit to Sri Lanka. He is scheduled to meet Sri Lankan President Gotabaya Rajapaksa and Prime Minister Mahinda Rajapaksa during his visit and discuss key issues including economic and strategic cooperation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X