வெளியே போ கோத்த! இலங்கையில் அடாத மழையில் விடாது போராடும் மக்கள்! அடம்பிடிக்கும் ராஜபக்சே குடும்பம்!
கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கோத்தபய ராஜபக்ச அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நீண்ட விடுமுறையானது, கொழும்பு வீதிகளில் நடக்கும் "கோ ஹோ ஹோம்" போராட்டத்திற்கு பலம் சேர்த்ததாகவே தெரிகிறது.
கோட்டாபய ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஒன்று கூடிய மக்கள், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்.

கொட்டும் மழையில் முழக்கம்
ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய புயல்களுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகேயுள்ள கடற்பரப்பில் திரண்டிருந்தனர். ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்தவாறும், ஆர்ப்பாட்டக்காரர்கள், பெரும்பாலும் இளைஞர்கள், கோத்தபய மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

மருத்துவர்களும் போராட்டம்
ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். "எங்களிடம் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை. நான் எப்போதும் மக்களை காப்பாற்ற உழைத்து வருகிறேன். ஆனால் இப்போது அவர்கள் இறப்பதை நான் காண்கிறேன், "என்று பெயர் வெளியிட விரும்பாத கொழும்பில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவமனையைச் சேர்ந்த 35 வயதான பணியாளர் செவிலியர் கூறினார்.

மைத்திரிபால சிறிசேன
அண்மையில் ஆட்சியில் இருந்து விலகிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 41 எம்.பி.க்களுடன் கோத்தபய முக்கிய சந்திப்பொன்றை நடத்தினார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டது. "ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இல்லாத ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோத்தபயவை சமாதானப்படுத்துவதே சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்" என்று சிறிசேன கூறினார்.
Recommended Video

போராட்டத்திற்கு முடிவே இல்லை
ஆட்சியை கோத்தபய கைவிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இடைக்கால ஏற்பாடு அவருக்குக் கீழ் இருக்க வேண்டும் என்றும் அவர் நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதேவேளை, மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தவறினால், கோத்தபயவின் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் தீர்மானத்தை முன்வைப்போம் என சஜித் பிரேமதாசவின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) அறிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறும் சஜித் கோரி வருகின்றார். கோட்டாபய மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வரும் நிலையில், தீவு தேசத்தில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டைக்கு முடிவே இல்லை என உலக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications